உக்ரைனுக்கு கிடைத்த உதவி போன்று இலங்கைக்கும் கிடைப்பதற்கு இந்தியா முயற்சித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் இதைத் தெரிவித்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை நேற்று இரவு சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இலங்கையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை, டாலர். அதற்கு தீர்வு கொடுப்பதற்காக நமது நாடு கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒன்றரை மில்லியன் டாலர் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து உதவியாக சென்றிருக்கிறது. அவசர கால உதவியாக நம் பிரதமர் மோடி சார்பில் மருத்துவம், காய்கறி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.
இதையும் படிங்க… “அனுமான்போல இலங்கை நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயார்”- அண்ணாமலை பேட்டி
இலங்கையை வருவாயில் மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் சேர்க்க இந்திய அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு கிடைத்த உதவி போன்ற இலங்கைக்கு கிடைப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது நம் அரசு. மாநில அரசு கொடுத்திருக்கக்கூடிய உதவிகளையும் இலங்கை மக்கள் விரும்பி இருக்கிறார்கள்.
இந்திய வம்சாவளியினரும் அதனை வரவேற்று இருக்கிறார்கள். முதலமைச்சர் இலங்கை மக்களுக்கு அளிக்கக்கூடிய உதவிகளை இலங்கை மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். கட்சி என்ற அடிப்படையில், தமிழக அரசு செய்யக்கூடிய உதவிக்கு பாரதிய ஜனதா கட்சி உடன் இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM