சென்னை: வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக்கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு லாக்கப் டெத் நடைபெற்றுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியின்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினால் தந்தை மகன் அடித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் இன்றுவரை விவாதப்பொருளாகி உள்ள நிலையில், அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், தற்போது காவல்துறையை தனது கையில் வைத்துக்கொண்டிருக்கும் நிலையிலும் காவல்நிலைa மரணங்கள் தொடர்கின்றன.
இதுதொடர்பாக விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், காவலர்கள் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களை அழைத்துச்சென்று துன்புறுத்துகின்றன. அதற்கு தடை விதிக்க வேண்டும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ், வழக்கு விசாரணைக்காக வரும் நபர்களை துன்புறுத்தக்கூடாது என்று என காவல்துறையினருக்க அறிவுறுத்தியதுடன், காவல்துறையின் புலன் விசரணையில் நீதிமன்றம் தலையிடாது, துன்புறுத்தல் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தால் நீதிமன்றம் கண்மூடி இருக்காது என எச்சரித்தார். ஒருவரை விசாரணைக்கு அழைத்தல் உச்சநீதிமன்ற வழிகாட்டு விதிகளை கண்டிப்பாக போலீஸ் பின்பற்ற வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.