ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த 25 வயது இளம்பெண்! இந்த ஆச்சரியம் நினைவிருக்கா?


கடந்த 2021ஆம் ஆண்டு இதே நாளை உலகம் மறந்திருக்காது. ஏனெனில் உலகமே கொரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயைப் பற்றிய செய்தியும் பெரிய அளவில் பேசப்பட்டது.

மாலி நாட்டைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸி, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 9 குழந்தைகளும் உயிருடன் ஆரோக்கியமாக இருந்தது ஆச்சரியத் தகவலாகப் பார்க்கப்பட்டதும்.

ஹலிமா சிஸ்ஸி என்ற 25 வயது பெண் 2020ஆம் ஆண்டு கர்ப்பமுற்றார். அவரை ஸ்கேன் செய்து பார்த்த போது, 7 குழந்தைகள் அவரது வயிற்றில் இருப்பதாகக் கண்டுபிடித்தனர் மருத்துவர்கள்.

இதனால் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை முறையாக வழங்க மாலி அரசும் உத்தரவிட்டது.

இந்நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் பிரசவவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எல்லோரும் 7 குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்த்த நிலையில் எதிர்பார்ப்புக்கு மேலாக 9 குழந்தைகள் பிறந்தன.

இது அங்கிருந்த ஒட்டுமொத்த மருத்துவக் குழுவுக்கும் ஆச்சரியமாக அமைந்தது. பிறந்த 9 குழந்தைகளில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் ஆகும்.

சிறந்த சிகிச்சையின் காரணமாக தாயும் , சேயும் நலமாக இருந்தனர்.

இதற்கிடையே, இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இதற்கு முன், அமெரிக்காவைச் சேர்ந்த நாடியா சுலேமான் என்பவர் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.

இந்த அறுவை சிகிச்சையின்போது, சிஸ்ஸிக்கு பெரிய அளவில் ரத்த இழப்பு ஏற்பட்டதாகவும், அவர் மரணவாயிலைத் தொட்டுத் திரும்பியதாகவும் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

பிரசவத்துக்கு மட்டும் சுமார் 10 கோடி செலவான நிலையில் அந்த செலவை அரசாங்கமே ஏற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.