20-வது ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசை : இந்திய அணியின் நிலை என்ன ?

துபாய்,
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான  அணிகள் தரவரிசையை சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி 8,093 புள்ளிகளுடன் ( 270 ரேட்டிங் ) தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

இந்திய அணியின் 20 ஓவர் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி ஒரு 20 ஓவர் போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. இதன் காரணத்தால் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
2-வது இடத்தில் இங்கிலாந்து அணியும், 3-வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி 6,336 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 5-வது இடத்தில் உள்ளது.
இந்த வருட இறுதியில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதே நேரத்தில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்தில் உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.