சென்னை: விசாரணை கைதி விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயம் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷின் உடலில் லத்தியால் தாக்கியதற்கான காயங்கள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியள்ளது. விக்னேஷின் தலை, கண், உடலில் ரத்தம் கட்டிய காயங்கள் இடது கை முதுகின் வலது பக்கத்தில் காயம் வலது முன்னங்காலில் எலும்பு முறிவு இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் தகவல்கள் வெளியாகியள்ளது சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையை விக்னேஷின் குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் அளித்தது