மரியுபோலின் இரும்பு ஆலைக்குள் நுழைந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்ரைனின் ராணுவ படையினருடனான தகவல் தொடர்பை இழந்து இருப்பதாக அந்தப் பகுதியின் மேயர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுப்போலின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக முற்றுகையிட்டு இருந்த ரஷ்ய ராணுவத்தினர், தற்போது ஆலைக்குள் அதிரடியாக நுழைந்து உக்ரைன் ராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, இரும்பு ஆலையில் உக்ரைன் ராணுவம் நடத்திய மீட்பு நடவடிக்கையில், 100 மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றபட்டனர், இருப்பினும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்னமும் ஆலையின் பதுங்கு குழிகளுக்குள் சிக்கியுள்ளனர்.
Azovstal. pic.twitter.com/SPougVD4yg
— ТРУХА⚡️English (@TpyxaNews) May 4, 2022
இந்தநிலையில், அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை குறித்து தகவல் தெரிவித்துள்ள மரியுபோல் நகரின் மேயர் வாடிம் போயிச்சென்கோ, ஆலையினுள் ரஷ்ய ராணுவ வீரர்களின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைனிய வீரர்கள் தொடர்ந்து போராடிவருவதாகவும், ஆனால் தற்போது உக்ரைன் ராணுவ படையினருடனான தகவல் தொடர்பை தாங்கள் இழந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவுடன் சேர்த்து பெலாரஸை எதிர்க்கவும் தயார்: உக்ரைன் பாதுகாப்பு செய்திதொடர்பாளர் அதிரடி!
இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் தனது தாக்குதலின் வேகத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சிப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.