சென்னையில் ஆசியாவின் முதல் ஆராய்ச்சி மையம்.. ஃபைசர் அறிவிப்பு!

அமெரிக்க பார்மா நிறுவனம் ‘ஃபைசர்’ மெட்ராஸ் ஐஐடி ஆய்வு பூங்காவில் தங்களது ஆசியாவின் முதல் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஃபைசர் நிறுவனம் இந்த ஆய்வு மையத்திற்காக 150 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்ய உள்ளது. அதற்காக 61,000 சதுர அடி இடம் ஐஐடி மெட்ராஸ் ஆய்வு பூங்காவில் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுடன் கூட்டணி.. அமெரிக்க நிறுவனம் செம அறிவிப்பு.. புதிய டெக்னாலஜி..!

 ஆராய்ச்சி மையத்தின் சிறப்பு

ஆராய்ச்சி மையத்தின் சிறப்பு

ஃபைசர் நிறுவனம் அமைக்கும் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் 250 விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இங்கு புதிய மூலக்கூறுகள், சூத்திரங்கள் மற்றும் மருத்து பொருட்கள் ஆகியவற்றை உருவாக்கும் பணிகள் நடைபெறும் ஃபைசர் தெரிவித்துள்ளது.

ஆசியா

ஆசியா

இந்த ஆராய்ச்சி மையம் உலகெங்கிலும் உள்ள ஃபைசரின் தயாரிப்புகளை உருவாக்கி வழங்கும். உலகம் முழுவதும் ஃபைசர் நிறுவனத்துக்கு இதனுடன் சேர்த்து 12 ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. ஆசியாவில் இதுதான் முதலாவது என்பது சிறப்பு வாய்ந்தது.

அதிநவீன ஆய்வகம்
 

அதிநவீன ஆய்வகம்

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் அமைய உள்ள ஃபைசரின் மருந்து மேம்பாட்டு மையம், சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அமைக்கும் அதிநவீன ஆய்வகங்களில் ஒன்று என ஃபைசர் இந்தியாவின் மேலாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

தொழில்நுட்பம் மருத்துவம்

தொழில்நுட்பம் மருத்துவம்

மருந்து வளர்ச்சி என்பது தொழில்நுட்பம் மருத்துவத்தைச் சந்திக்கும் மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pfizer sets up Asia’s first global drug development center in Chennai IIT

Pfizer sets up Asia’s first global drug development center in Chennai IIT | சென்னையில் ஆசியாவின் முதல் ஆராய்ச்சி மையம்.. ஃபைசர் அறிவிப்பு!

Story first published: Wednesday, May 4, 2022, 21:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.