முதல் நாளே களைகட்டிய எல்ஐசி ஐபிஓ.. முதலீடுகளை வாரி குவித்த முதலீட்டாளர்கள்..!

இந்திய வரலாற்றிலேயே மிக முக்கிய பங்கு வெளியீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் எல்ஐசி, இன்று காலை வெற்றிகரமாக தொடங்கியது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது என்றே கூறலாம்.

இன்று மாலை 4.18 மணி நிலவரப்படி, எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டில் 61% விண்ணப்பத்தினை பெற்றுள்ளது.

இப்பவே இப்படியா.. 6 வார உச்சத்தில் பாமாயில் விலை.. இந்தோனேசியாவின் நடவடிக்கைக்கு பிறகு என்னவாகும்?

முதல் பங்கு வெளியீட்டு நாளான மே 4 இன்றே, முதலீடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளது எனலாம்.

முதலீட்டாளர்களின் ஆர்வம்

முதலீட்டாளர்களின் ஆர்வம்

எல்ஐசி பாலிசி ஹோல்டர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முதல் நாள் பங்குகளில் 1.79 மடங்கு பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளனர்.

இதே ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 98 சதவீதமும் விண்ணப்பித்துள்ளனர்.

இதே சில்லறை முதலீட்டாளர்கள் 54 சதவீதமும் விண்ணப்பித்துள்ளனர்.

நிறுவனம் அல்லாத முதலீட்டாளார்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் 25% சந்தாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே தகுதி வாய்ந்த நிறுவனங்கள் 33 சதவீதம் பங்குகளையும் வாங்கிக் குவித்துள்ளனர்.

 

மற்ற முக்கிய விவரங்கள்?

மற்ற முக்கிய விவரங்கள்?

மே 4 ஆன இன்று தொடங்கியுள்ள ஐபிஓ ஆனது, மே 9 அன்று முடிவடையவுள்ளது.

இதேபோல மே 16 அன்று டிமேட்களுக்கு பங்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் 17 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
 

யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

எல்ஐசி பங்கு வெளீயீட்டில் 50 சதவீதம் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 15% நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு பங்குகள் வெளியீடு?

எவ்வளவு பங்குகள் வெளியீடு?

இந்த பங்கு வெளியீட்டில் 221.37 மில்லியன் பங்குகள் விற்பனை செய்யபடவுள்ளன. இதன் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு 59.29 மில்லியன் பங்குகளாகவும், இதே பணியாளர்களுக்கு 1.58 மில்லியன் பங்குகளும், பாலிசி ஹோல்டர்களுக்கு 22.14 மில்லியன் பங்குகளும், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு 98.83 மில்லியன் பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் நாளே களை கட்டிய எல்ஐசி ஐபிஓ

முதல் நாளே களை கட்டிய எல்ஐசி ஐபிஓ

முதல் நாளே மிகப்பெரிய அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ள எல்ஐசி பங்கு வெளியீட்டில், இனி வரும் நாட்களும் மிகப்பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள், பாலிசி ஹோல்டர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான விண்ணப்பங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC has received 61 percent of the application for public offering

LIC has received 61 percent of the application for public offering/முதல் நாளே களைகட்டிய எல்ஐசி ஐபிஓ.. முதலீடுகளை வாரி குவித்த முதலீட்டாளார்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.