நாற்பதை தாண்டியோருக்கு 7 மணிநேர தூக்கம் இல்லையெனில்… – எச்சரிக்கும் புதிய ஆய்வு

நமது ஒவ்வொரு புதிய நாளும், முந்தைய நாள் இரவின் தூக்கத்தில் இருந்தே தொடங்குகிறது என்றால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு ஒருவரது தூக்கம் அவரின் மனம், உடல் நலத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதனால் தான் மருத்துவ நிபுணர்கள், ஆய்வாளர்கள் சராசரியாக 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால் இன்றைய தொழில் நுட்ப உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முதலில் தொலைத்தது தூக்கத்தைத் தான்.

இந்த நிலையில், 40+ வயதினருக்கு 7 மணிநேரம் தூக்கம் மிகவும் அவசியம் என்கிறது புதிய ஆய்வறிக்கை ஒன்று. முந்தைய ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மெட்டா பகுப்பாய்வு, 7 மணிநேர தூக்கம், ஒருவரது அறிவாற்றல் திறனை மேம்படுத்தி, டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் இழப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்து மன ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது என்கிறது. “நேச்சர் ஏஜிங்க்” என்ற இதழில் வெளியான புதிய ஆய்வுக்கட்டுரை ஒன்று 7 மணிநேரத்திற்கும் கீழாக தூக்கம் உடைவர்களுக்கு நினைவாற்றல் குறைபாடு, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது, கவனம் செலுத்துவது, முடிவெடுப்பது, சிக்கலைத் தீர்ப்பது ஆகியவைகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறுகிறது.

எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதைப் போலவே எப்படித் தூங்குகிறோம் என்பதும் மிகவும் முக்கியம். வயது அதிகமாகும் போது, ஆழ்ந்து தூங்குகிறோமா என்பதும் முக்கியம். அப்படித் தூங்குவது மூளையின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. நல்லத் தூக்கம் எல்லா வயதினருக்கும் அவசியம் என்றாலும், வயதாகும் போது இரவில் நன்றாக உறங்குவதற்கான வழிகளை நாம் கண்டறிவது, நல்ல மனநலன், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நினைவாற்றல் இழப்புகளைத் தவிர்ப்பதற்கும் உதவுகிறது.
உங்களின் தூக்கத்தை பாதிக்க பல காரணிகள் இருக்கின்றன. அதனை தவிர்க்க இயற்கையாக தூக்கத்தை அடையும் வழிமுறைகள் கையாளுங்கள். அறையில் வெளிச்சம் இல்லை, அறை குளிர்ச்சியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அல்லது ஸ்லீப் மாஸ்கை அணியுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.