வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு கண்காட்சி! அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.!

வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  

பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம் வார்டு-123ல் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகதாரத் துறை இணைந்து நடத்தும் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று தொடங்கிவைத்தார். 

பின்னர் அமைச்சர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,

இந்திய வானிலை மையத்தின் அறிவுரைப்படி தற்பொழுது சென்னை, வேலூர், மதுரை, கரூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் 100 டிகிரி F மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. கடுமையான கோடை வெயிலின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி பொதுமக்கள்அனைவரும் அரசின் பாதுகாப்பு வழி முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும், முடிந்தவரை போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்லுங்கள். ORS மற்றும் எலுமிச்சை தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ள வேண்டும் மேலும் முலாம்பழம், கஸ்தூரி முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, வெள்ளரி அல்லது உள்நாட்டில் கிடைக்கும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும்.  

வெளிர்நிறங்களில் மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. சூரிய ஒளியில் நேரடியாக வெளிப்படும் போது குடை, தொப்பி, துண்டு மற்றும் பிற பாரம்பரிய தலையை மூடும் பொருட்களை பயன்படுத்தவும். வெயிலில் வெளியே செல்லும் போது காலணிகள் அணியுங்கள்.

நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும், வெளியில் செல்வதாக இருந்தால், உங்கள் வெளிப்புறச் செயல்பாடுகளை அன்றைய தினத்தின் குளிர்ச்சியான நேரங்களுக்குள் மேற்கொள்ளவும், அதாவது காலை மற்றும் மாலை நண்பகலில் வெளியில் செல்வதை தவிரக்கவும் குறிப்பாக மதியம் 12.00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை. மதியம் வெளியில் செல்லும்போது கடினமான செயல்களைத் தவிர்க்கவும். வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.

நண்பகலில் சமைப்பதைத் தவிர்க்கவும். சமையல் செய்யும் இடத்தை போதுமான அளவு காற்றோட்டம் செய்ய கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறக்கவும். 

ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அல்லது அதிக அளவு சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். இவை உண்ணும்போது அதிக உடல் திரவத்தை இழக்க வழிவகுக்கும் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தலாம்.

புரதச்சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்கவும், பழைய உணவுகளை உண்ண வேண்டாம். 

கடுமையான கோடை வெயிலின் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனி படுக்கைகள் ஒதுக்கப்பட்டு இதற்கான சிகிச்சை அளிப்பதற்கு இணைஇயக்குநர், மருத்துவப் பணிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, டீன் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர்.பிரியா, துணை மேயர் திரு. மகேஷ் குமார், மருத்துவம்-மக்கள் நழ்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.