முதலீடு செய்ய திட்டமா.. ELSS Vs PPF.. எது சிறந்தது.. உங்களுக்கு ஏற்றது எது?

இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் சேமிக்க வேண்டும், எதிர்காலத்திற்காக முதலீட்டினை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் எதில் முதலீடு செய்வது? எது பாதுகாப்பானது? ரிஸ்க் குறைவான முதலீடா? எங்கு செய்வது என பல கேள்விகள் இருக்கும்.

சொல்லப்போனால் சம்பாதிப்பதை விட, சம்பாதிக்கும் காசினை சேமிப்பதே பெரும் கேள்வியாக உள்ளது.

இன்னும் சிலருக்கு ஒரு படி மேலே போய் சேமிக்கும் திட்டத்திற்கு வரிச் சலுகையும் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். ஆக அப்படியான சில திட்டங்கள் பற்றியும், அதில் எது சிறந்தது என்பதையும் பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கி கவர்னர் திடீர் அறிவிப்பு.. 2 மணிக்கு முக்கிய அறிக்கை வெளியீடு..!

என்ன திட்டங்கள்?

என்ன திட்டங்கள்?

நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மற்றொன்று ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் ஸ்கீம் (ELSS) ஆகும். . இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன? இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? எது முதலீட்டுக்கு சிறந்தது? எதில் லாபம் அதிகம் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

ELSS

ELSS

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் வருமான வரி சலுகை உள்ள திட்டங்களில் ELSS-ம் ஒன்று. இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரி சலுகை கிடைக்கும். இந்த ஃபண்டுகள் ஈக்விட்டியுடன் அதிக தொடர்புடையதால் அதிக லாபம் கிடைக்கும் ஃபண்டுகளாக உள்ளன. இதனாலேயே பங்கு சந்தையில் அனுபவம் இல்லாதவர்கள் மத்தியில் இந்த பங்கு, மிக பிரபலமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

லாகின் பீரியர்டு & எஸ்ஐபி
 

லாகின் பீரியர்டு & எஸ்ஐபி

இதில் ஷார்ட் டெர்ம் லாகின் பீரியர்டு என்பதால் இதுவும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக எஸ் ஐ பியிலும் முதலீடு செய்யலாம் என்பதால், இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது. எனினும் இது ஈக்விட்டி தொடர்பான முதலீடு என்பதால் சற்று ரிஸ்கும் அதிகம். ஆக சிறு முதலீட்டாளர்கள் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

பிபிஎஃப் (PPF)

பிபிஎஃப் (PPF)

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் அஞ்சலக திட்டங்களில் மிக பிரபலமான ஒன்று. ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு, இது சிறந்த பரிந்துரையாக பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்திலும் 80சி -யின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரிச்சலுகை கிடைக்கும். இந்த திட்டத்தில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது. இது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அரசு மாற்றியமைத்து வருகிறது. எப்படியிருப்பினும் சந்தை அபாயம் இல்லை. நிரந்தர வருமானம் கிடைக்கும்.

பிபிஎஃப்- முதிர்வுகாலம்

பிபிஎஃப்- முதிர்வுகாலம்

எனினும் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். அதேபோல குறைந்தபட்சம் மாதம் 500 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்ய தொடங்கலாம். அதிகபட்சம் ஆண்டுக்கு 1.5 லட்சம் வரையில் மட்டுமே முதலீடு செய்து கொள்ளலாம். முதிர்வு காலத்திற்கு முன்பு பணத்தினை வெளியே எடுத்தால், முழு பலன்கள் இருக்காது.

எது சிறந்தது?

எது சிறந்தது?

பிபிஎஃப் Vs ELSS இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இரண்டிலுமே வரி சலுகை உண்டு. முதலீடும் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்தே செய்யலாம். ஆனால் ELSS திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய்க்கு மேலாகவும் முதலீடு செய்யலாம். ஆனால் பிபிஎஃப் திட்டத்தில் அப்படி செய்ய முடியாது. வருமானம் என பார்க்கும்போது நிலையான வருமானம் என்றாலும், தற்போது நிலவரப்படி 7.1% தான் வட்டி விகிதம். ஆனால் ELSS-ல் அப்படி இல்லை.

ELSS Vs பிபிஎஃப்

ELSS Vs பிபிஎஃப்

ELSS-ல் வருமானம் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப மாறுபடும், ரிஸ்கும் அதிகம். ELSS-ல் லாகின் காலம் 3 ஆண்டுகள். பிபிஎஃப்-ல் 15 ஆண்டுகள். ஆக ரிஸ்க் இருந்தாலும் பரவாயில்லை லாபம் அதிகம் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இ எல் எஸ் எஸ்- திட்டமே சிறந்ததாக இருக்கும். ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை, வருவது வரட்டும் என நினைப்பவர்களுக்கு பிபஎஃப் சிறந்ததாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் இதில் முதிர்வுகாலம் மிக அதிகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ELSS vs PPF: which one is best for investment? where to invest money for good returns?

ELSS vs PPF: which one is best for investment? where to invest money for good returns?/முதலீடு செய்ய திட்டமா.. ELSS Vs PPF.. எது சிறந்தது.. உங்களுக்கு ஏற்றது எது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.