வீட்டு கடன், வாகன கடனுக்கான இஎம்ஐ அதிகரிக்கப்போகிறது.. ரெப்போ விகித மாற்றத்தால் மக்கள் அதிர்ச்சி!

சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் என்ற கவலைகளுக்கு மத்தியில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.

குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில், பணவீக்கமாக சர்வதேச அளவில், மிக மோசமான காரணிகளில் ஒன்றாக மாறி வருகின்றது.

இது பொருளாதாரத்தினை மிக மோசமாக பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவு?

இதற்கிடையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் கட்டாயம் அதிகரிக்கலாம் என்ற சூழல் நிலவி வருகின்றது. இதற்கிடையில் இன்று திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்த ஒரு மனதாக முடிவு செய்யப்பட்ட்டுள்ளது.

ரெப்போ விகிதம் அதிகரிப்பு

ரெப்போ விகிதம் அதிகரிப்பு

இது ரெப்போ விகிதத்தில் 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 4.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதமானது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் உயர்ந்து வரும் பணவீக்கத்தினை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பணவீக்கம்
 

நுகர்வோர் பணவீக்கம்

கடந்த மார்ச் மாதத்த்ஜினை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கமும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

SDF  மற்றும் MSF

SDF மற்றும் MSF

எஸ்டிஎஃப் (SDF ) விகிதத்தினை 4.15 சதவீதமாகவும், இதே எம் எஸ் எஃப்(MSF)விகிதத்தினை 4.65 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

தாக்கம் என்ன?

தாக்கம் என்ன?

ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி அதிகரிப்பு முடிவால், கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம். இதன் காரணமாக மாத மாதம் செலுத்தும் தவணை தொகையும் அதிகரிக்கலாம். இது சாமானிய மக்கள் மத்தியில் மேலும் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும். மேலும் கடன் வளர்ச்சியினையும் பாதிக்கலாம்.

 

தேவை சரியலாம்

தேவை சரியலாம்

மேலும் இந்த வட்டி அதிகரிப்பினால் தேவையும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வளர்ச்சியினை மெதுவாக்கலாம். அதேபோல நிறுவனங்களின் பணப்புழக்கத்தினை குறைக்கலாம். இதுவும் வளர்ச்சியில் தாகத்தினை ஏற்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi ஆர்பிஐ

English summary

RBI gur shaktikanta das to address the media: Repo rate hiked by 40 bps

RBI gur shaktikanta das to address the media: Repo rate hiked by 40 bps/இனி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. ரெப்போ விகிதம் 40bps திடிரென அறிவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.