மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகஅரசு – இந்திய மாநிலங்களின் தொழில்நுட்ப உதவி மற்றும் பகுப்பாய்வு உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகஅரசு – இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

தமிழ்நாடுஅரசு மற்றும் இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையத்திற்கிடையே அரசின் கொள்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதில் தொழில்நுட்பஉதவி மற்றும் பகுப்பாய்வு உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப் பட்டது.   இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும்  இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையத்துடன் (Centre for Effective Governance of Indian States) அரசின் கொள்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப உதவி மற்றும் பகுப்பாய்வு உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  இந்திய மாநிலங்களில் பயன்மிகு ஆளுமைக்கான மையமானது (CEGIS) இலாப நோக்கமற்ற அமைப்பாகும். இது மாநிலங்களின் செயல்பாட்டினை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறது. இந்த மையம் ஏற்கனவே சில மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இம்மையமானது, மாநில வருவாயை பெருக்குதல், அரசு கொள்முதலின் செயல்திறன் மற்றும் பணத்திற்கான மதிப்பினை மேம்படுத்துதல், மனிதவள மேலாண்மை அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை அமைப்பினை  ஒருங்கிணைபிற்கான பகுப்பாய்வு செய்தல் போன்ற பணிகளில் தமிழ்நாடு அரசிற்கு உதவி புரியும்.

இந்நிகழ்வின்போது,  நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, இ.ஆ.ப.,  நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.என்.முருகானந்தம், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் செயலாளர் திரு.பிரசாந்த் மு.வடநெரே, இ.ஆ.ப., துணைச் செயலாளர் (பட்ஜெட்) திரு.சிபி ஆதித்யா செந்தில் குமார், இ.ஆ.ப., துணைச் செயலாளர் திரு.பிரத்திக் தயாள், இ.ஆ.ப.,  இந்திய மாநிலங்களின் பயன்மிகு  ஆளுமைக்கான மையத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர்  திரு.ஆஷிஷ் தவான், தலைவர் டாக்டர் விஜய் பிங்களே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.