ஓட்டமாவடி முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களுக்கு வரவேற்பு

கல்வியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைவாக இவ்வருட கல்வியாண்டிற்கு அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப்பிரிவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.யூ.எம்.நளீம் ஸலாமி தலைமையில்  05.05.2022ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் அதிதிகளாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜூனைட் (நளீமி), முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.எம்.காதர் ஆசிரியர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஓய்வுபெற்ற அதிபர்களான ஏ.எல்.நெய்னா முகம்மது, எம்.பிர்தெளஸ், பாடசாலை அமுலாக்கக் குழுவின் தலைவர் காதர் ஹாஜியார், செயலாளர் ஹாலித், கல்குடா டைவர்ஸ் கல்விப்பொறுப்பாளர் ஆர்.ஜூனைட் ஆசிரியர், எம்.அமீர் (அமானா வங்கி), சனசமூக நிலையத்தலைவர் தலைவர் ஜிப்ரி கலந்தர், எம்.ஐ.முஹாஜிரீன் ஆசிரியர், அறபா பள்ளிவாயல் தலைவர் எம்.ஹமீட், சகோதரர் புஹாரி, சிரேஷ்ட ஆசிரியர் கலாபிர் உட்பட பெற்றோர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இவ்வித்தியாலயத்தில் முதலாவது அணியினராக இப்பிரதேசத்தைச்சேர்ந்த 19 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Media Unit, – Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.