புதுச்சேரி-சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கணபதிசெட்டிக்குளம் வடக்கு தெரு மற்றும் புதுநகர் தெருக்களை புதிதாக அமைத்து தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ.,வுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து 16 லட்சத்து 12 ஆயிரத்து 848 ரூபாய் மதிப்பில் வடக்கு தெரு மற்றும் புதுநகர் முழுவதும் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார்.சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், தரமாக சாலை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
புதுச்சேரி-சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கணபதிசெட்டிக்குளம் வடக்கு தெரு மற்றும் புதுநகர் தெருக்களை புதிதாக அமைத்து தர வேண்டும் என
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.