தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வரும் 8ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் உருவான பின் நகர்ந்து வரும் 10ஆம் தேதியன்று ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய பகுதியில் நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், வரும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை தருமபுரி, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.