அமெரிக்காவில் 30 வயதான இளைஞர் ஒருவர் இதுவரை 47 குழந்தைகளுக்கு தந்தையாக மாறியுள்ளார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த கைல் கோர்டி (30) இவர் தற்போது 47 குழந்தைகளுக்கு தந்தையாகி விட்டார். இன்னும் 10 குழந்தைகளுக்கு தந்தையாக மாறவும் உள்ளார்.
இந்த குழந்தைகள் எல்லாம் அவர் விந்து தானம் செய்ததன் மூலம் பிறந்தவை ஆகும்.
உயிரணுக்களை தானம் செய்வதற்கான தனது விருப்பத்திற்கு வருத்தப்படவில்லை என்றாலும், அவரது முடிவு தனக்கு துணையை கண்டுபிடிப்பதை கடினமாக்கி உள்ளது என்று கைல் கூறுகிறார்.
அவருக்கு நீண்ட கால உறவுகள் யாரும் இல்லை. ஆனால் இப்போது அவரை நிறைய பெண்கள் அணுகுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக மட்டுமே வருகிறார்கள்.
அவர் கூறுகையில், பெரும்பாலான பெண்கள் என்னுடன் டேட்டிங் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
என் டேட்டிங் வாழ்க்கை பெரியளவு இல்லை, அதாவது நீண்டகால உறவுமுறை என்பது எனக்கு இல்லை.
என்னை புரிந்து கொண்டு ஏற்று கொள்ள ஒருவர் தேவை.
நான் தற்போது உயிரணுக்கள் தானம் செய்யும் உலகச் சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன், என் குழந்தைகளை வெளிப்படையாகச் சந்திக்கிறேன். இதைச் செய்வதன் மூலம் நான் பெறும் மகிழ்ச்சி உலகின் மிகச் சிறந்த உணர்வு என கூறியுள்ளார்.