மதுரையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு முதியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை : சிறுமியின் தந்தை உயிரிழந்த நிலையில் தாயுடன் அந்த சிறுமி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று திடீரென சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே, சிறுமியை தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் மற்றும் சிறுமியின் தாயார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்த சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம் வெளிவந்துள்ளது.
சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த பாலமுருகன் என்பவர், சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை அறிந்த சிறுமியினுடைய தந்தையின் நண்பரான ரமேஷ் என்பவரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், 2 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.