முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த ஆண்டு இதே மே மாதம் கொரோனாவுக்கு மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும், மக்களின் பாதுகாப்பு கருதி லாக்டவுன் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தது. இதேவேளையில் வர்த்தகம், உற்பத்தி பாதிக்கக் கூடாது என்பதற்காகத் தொழிற்சாலைகளை மொத்தமாக மூடாமல் இயக்க அனுமதி கொடுத்தது.
அதிலும் குறிப்பாக ஏற்றுமதி வர்த்தகத்தைச் சார்ந்து இருக்கும் வர்த்தகம், தொழிற்சாலைகளுக்குக் குறிவைத்துக் கூடுதல் சலுகையும் பாதுகாப்பும் கொடுத்தது. இது பெரிய அளவில் பலன் கொடுத்து என்றால் மிகையில்லை.
இப்படிச் சவாலான காலத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் கடந்த ஒரு ஆண்டு நிறைவில் சிறப்பான பல சாதனைகளைப் படைத்துள்ளது முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு.
மேட் இன் இந்தியா என்பது போல மேட் இன் தமிழ்நாடு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு…!
மு.க.ஸ்டாலின் கனவு திட்டம்
தமிழ்நாட்டில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் பகுதி பகுதியாக நீக்கப்பட்ட உடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கனவுத் திட்டத்தை அறிவித்தார். 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றவும், ஏற்றுமதி 300 பில்லியன் டாலர் அளவீட்டைத் தொடவும், 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் முக்கியமான திட்டத்தை அறிவித்தார்.
4 மடங்கு வளர்ச்சி
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பொருளாதாரத்தை 10 ஆண்டுகளில் 280 பில்லியன் டாலர்களிலிருந்து நான்கு மடங்காக உயர்த்த அதாவது 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்த ஏதுவான புதிய கொள்கைகள் மற்றும் தொழில்துறை திட்டங்களை அடுத்தடுத்து அறிவிக்கத் துவங்கியது.
131 ஒப்பந்தங்கள்
இதன் எதிரொலியாக ஜூலை 20, 2021ல் இருந்து தமிழக அரசு சுமார் 131 ஒப்பந்தங்கள் மூலம் 69,375.5 கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக மட்டும் சுமார் 2.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது.
முக்கியத் துறைகள்
தமிழ்நாடு அரசின் புதிய கொள்கை, திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்குச் சாதகமான துறைகளைக் கண்டறிந்துள்ளது. இதில் ஏரோஸ்பேஸ், டிபென்ஸ் அப்ளிகேஷன், அக்ரோ மற்றும் புட் பிராசசிங், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு, பயோடெக்னாலஜி, கெமிக்கல்ஸ், பெட்ரோ கெமிக்கஸ் ஆகிய துறையே தேர்வு செய்து முதலீட்டையும், புதிய நிறுவனத்தையும் ஈர்க்க உள்ளது.
தமிழ்நாடு MSME
தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் தொழிற்துறை வளர்ச்சிக்கு MSME நிறுவனங்கள் தான் அடித்தளம் என உணர்ந்த தமிழக அரசு, தமிழ்நாட்டில் இருக்கும் MSME நிறுவனத்திற்கு ஏற்றுமதி வர்த்தகத்திற்காகப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.
சில சரிவுகள்
ஆனால் இதேவேளையில் சில சரிவுகளையும் தமிழக அரசு இந்த ஒரு ஆண்டில் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாகச் சென்னை பாக்ஸ்கான் ஊழியர்களின் உணவில் ஏற்பட்ட புட் பாய்சன் அதைத் தொடர்ந்து ஊழியர்கள் போராட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. ஆனால் தமிழக அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு வரைவில் பிரச்சனையை முடித்தது.
மின்சாரம்
இதேபோல் தமிழ்நாட்டில் மின் வெட்டு பெரிய அளவில் இல்லையென்றாலும் பெரும் பகுதி ஊழியர்கள் இன்னும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாடு மின்சார வாரியம் அதன் அதிகப்படியான தேவை அளவான 17000 மெகாவாட் மின்சாரத்தை அடைந்துள்ள நிலையில் மின்சார உற்பத்தியை விரைவில் உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடுகள்
மேலும் தமிழக அரசு ஐடி, டெக், பின்டெக், ஈகாமர்ஸ் போன்ற புதிய டிஜிட்டல் சேவைகள் சார்ந்த வர்த்தகத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக டைடல் பார்க் உட்படப் பல புதிய உள்கட்டமைப்பு மேம்பாடுகளைச் செய்யத் திட்டமிட்டு உள்ளது.
தமிழ்நாடு டாப்பு
ஒருபக்கம் உற்பத்தி, ஏற்றுமதி, MSME, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு, ஸ்டார்ட்அப், டெக்னாலஜி ஆகியவற்றுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்தும் வரும் வேளையில் புதிய வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் சாலை, வீட்டு வசதி, சென்னை தாண்டி மாற்றுத் தொழிற்துறை பகுதி, அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி, அடிப்படை சுகாதாரம், போக்குவரத்து, பயண நேரம் குறைத்தல் எனப் பல முக்கியப் பணிகளையும் அரசு செய்து வருகிறது.
MK stalin govt completed one year; Tamil Nadu industries towards $1 trillion economy goal
MK stalin govt completed one year; Tamil Nadu industries towards $1 trillion economy goal 8 வருடத்தில் $1 டிரில்லியன் பொருளாதாரம்.. முக.ஸ்டாலின் கனவுத் திட்டம்.. ஒரு ஆண்டுச் சாதனை என்ன..?