பெண்களுக்கு இனி வரும் காலங்களில், ஓட்டுனர் உரிமம் வழங்கப்படாது என, அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி,
தாலிபான்
அமைப்பினர் ஆட்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்றினர்.
தாலிபான் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டு உள்ளது. தாலிபான் ஆட்சி முறைக்கு பயந்து, ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். எனினும் கடந்த முறை போல் அல்லாமல், சம உரிமையுடன் ஆட்சி நடைபெறும் என, தாலிபான் அமைப்பினர் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான்
நாட்டில் தாலிபான் அரசு அமைந்த பிறகு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, பெண்கள் பள்ளிகளுக்கு செல்லவும், கல்லூரிகளுக்கு செல்லவும், தனியாக வெளியே செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால் இவற்றையெல்லாம் தாலிபான் அமைப்பு கண்டு கொள்ளவே இல்லை.
விண்வெளிக்கு செல்லும் மனிதர்களின் நிர்வாண புகைப்படங்கள்!
இந்நிலையில், பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தலைநகர் காபூல் மற்றும் பல்வேறு மாகாணங்களில் தாலிபான் அரசு நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கையகப்படுத்துவதற்கு முன்பு, காபூல் உட்பட நாட்டின் சில முக்கிய நகரங்களில் பெண்கள் வாகனம் ஓட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.