ஆம்புலன்ஸ் வராததால் மகன் சடலத்தை டூவீலரில் தூக்கி சென்ற தந்தை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நெல்லூர்: ஆந்திராவில் இறந்த தன் மகனின் சடலத்தை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வர மறுத்ததால் இருசக்கர வாகனத்தில் தூக்கி சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கனிகிரி கால்வாயில் இரு சிறுவர்கள் நேற்று முன்தினம் (மே 4) தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட ஒரு சிறுவனின் உடலை உறவினர்கள் நேரடியாக வீட்டுக்கு கொண்டு சென்றனர். மற்றொரு சிறுவனை உயிரோடு இருப்பதாக கருதி அவரது பெற்றோர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அச்சிறுவனின் பெற்றோர் சோகத்தில் மூழ்கினர்.

latest tamil news

இந்நிலையில், சிறுவனின் உடலை எடுத்துச்செல்ல இலவசமாக இயக்கப்படும் ஆம்புலன்சை அழைத்தபோது, விதிகளில் அதற்கு இடமில்லை எனக்கூறி ஓட்டுநர் வர மறுத்தார். இதனால் வேறுவழியின்றி சிறுவனின் தந்தை இருசக்கர வாகனத்திலேயே உடலை வீடு வரை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், மருத்துவமனை நிர்வாகத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவும் ஆந்திராவின் திருப்பதியில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தனது மகனின் சடலத்தை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிக பணம் கேட்டதால் அவரது தந்தையே ஸ்கூட்டரில் எடுத்து சென்ற சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.