மத்திய அரசு டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதே அளவிற்கு முதல் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்த முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கொடுக்கிறது.
இதற்கான முதல் படி தான் விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கை.
3 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பறந்த ஜெட் ஏர்வேஸ்.. விமான பயணிகள் மகிழ்ச்சி!
விவசாயம்
தமிழ்நாட்டில் பெரும் பகுதி மக்கள் தொகை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறையில் இருக்கும் நிலையில் தமிழக அரசின் இந்தத் தனிப் பட்ஜெட் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.
குறிப்பாகத் தற்போது நாடு முழுவதும் உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கும் நிலையில், விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் ஒவ்வொரு மாநிலத்திற்கும் முக்கியமானதாக விளங்குகிறது.
உணவு தானிய உற்பத்தி
கடந்த நிதியாண்டில், உணவு தானிய உற்பத்தி 118 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 9% அதிகமாகும் மற்றும் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இயற்கை பேரழிவுகளால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரூ.155 கோடி ரூபாய் இழப்பீடு
வடகிழக்கு பருவமழையால் கடுமையான சேதத்தால் பாதிக்கப்பட்ட 3.4 லட்சம் விவசாயிகள் மீண்டும் சாகுபடியை மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக ரூ.155 கோடி ரூபாயை இழப்பீடாக மானியத்தைத் தமிழக விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கியுள்ளது.
விவசாயத் துறை
ஏப்ரல் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, விவசாயத் துறைக்கான அரசின் வரைபடத்தைத் திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் வெளியிட்டார். 10 ஆண்டுகளில் இத்துறையில் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான லட்சியமான மூன்று முனை அணுகுமுறை வகுக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்புகள்
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் நிலத்தைச் சாகுபடிக்குக் கொண்டுவரும், தற்போதுள்ள நிகர அறுவடைப் பகுதியை 60% லிருந்து 75% ஆக அதிகரிப்பது, இரட்டைப் பயிர் பரப்பு 10 லட்சம் ஹெக்டேரில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பு, உணவு தானிய உற்பத்தியில் தமிழகத்தை நாட்டிலேயே முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற பல திட்டத்தை முன்வைக்கப்பட்டது மறக்கம முடியாது.
ஒருங்கிணைந்த விவசாய வளர்ச்சி திட்டம்
ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற உடன், ‘கலைஞரின் அனைத்து கிராமங்களையும் ஒருங்கிணைந்த விவசாய வளர்ச்சி’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நீர் ஆதாரங்கள், நுண்ணீர் பாசன அமைப்புகள் மற்றும் பிற உதவிகளை மூலம் தரிசு நிலத்தை விவசாயத்திற்கு ஏற்றதாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்த துவங்கிய தமிழக அரசு. இத்திட்டம் கடந்த ஆண்டு 1,997 கிராமங்களில் செயல்படுத்தப்படு வருகிறது.
சாகுபடி நிலம்
2021-22ல் இத்திட்டங்களை மூலம் மொத்த சாகுபடி பரப்பு 6.3 லட்சம் ஏக்கர் அதிகரித்து மொத்த சாகுபடி நிலத்தின் அளவு 116. 6 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
1.7 லட்சம் ஏக்கர் நிலம்
குறுவை பருவத்தில் (குறுகிய கால நெல்) கடந்த ஆண்டு 3.2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 1.7 லட்சம் ஏக்கர் கூடுதலாகச் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
73 லட்சம் மரக்கன்றுகள்
இதோடு கடந்த ஒரு வருடத்தில் சுமார் 7.5 லட்சம் ஏக்கர் உலர் நிலங்கள் உருவாக்கப்பட்டு, நிலையான பசுமை அட்டைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிகம் லாபம் தரும் 73 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு உள்ளது.
விவசாயப் பட்ஜெட்
இதுமட்டும் அல்லாமல் விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் இளம் தலைமுறையினரை அதிகளவில் விவசாயத் துறைக்கு அழைத்து வரும் பொறுத்துப் பல பிரிவுகளில் அரசு பயிற்சி அளிப்பது மட்டும் அல்லாமல், பல்வேறு விவசாயப் பொருட்களுக்கு அதிகளவிலான மானியம் கொடுக்கப்பட்டு உள்ளது, இது ஏற்கனவே இருந்தாலும் இப்பட்டியலில் புதிதாகப் பல பொருட்கள் விவசாயப் பட்ஜெட் அறிக்கைகளில் இணைக்கப்பட்டு உள்ளது
Tamil Nadu’s Mk Stalin Govt have bigger plans for agri economy just like Digital economy
Tamil Nadu’s Mk Stalin Govt have bigger plans for agri economy just like Digital economy தமிழ்நாடு: டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இணையாக வளரும் விவசாயப் பொருளாதாரம்..!