இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான டாடா பவர் நிறுவனம், மார்ச் 2022 காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம், 28 சதவீதம் அதிகரித்து, 503 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டில் 393 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் 15% அதிகரித்து, 11,960 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 10,379 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூருக்கு படையெடுக்கும் சீன நிறுவனங்கள்.. என்ன காரணம்?
பங்கின் தற்போதைய நிலவரம் என்ன?
என் எஸ் இ-யில் இப்பங்கு விலையானது 0.93% குறைந்து, 245.20 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 247 ரூபாயாகும். இத ன் குறைந்தபட்ச விலை 240.65 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 298.05 ரூபாயாகவும், இதன் 52 வார உச்ச விலை 100.25 ரூபாயாகும்.
பி எஸ் இ-யில் இப்பங்கு விலையானது 0.95% குறைந்து, 245.20 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 246.90 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 240.65 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 298 ரூபாயாகவும், இதன் 52 வார உச்ச விலை 100.30 ரூபாயாகும்.
எபிட்டா விகிதம்
இதே எபிட்டா விகிதம் 4வது காலாண்டில் 2,253 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 2021ல் 1668 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிவிடெண்ட் பரிந்துரை
இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு 1.75 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது. தொடர்ந்து கடந்த 10 காலாண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டு வரும் நிறுவனம், புதுபிக்கதக்க ஆற்றல் துறையில் நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது. இந்த பசுமை ஆற்றல் துறையில் மிகபெரிய அளவில் முதலீடுகளையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுபிக்கதக்க ஆற்றலில் கவனம்
கடந்த ஆண்டினை காட்டிலும் 4வது காலாண்டில் புதுபிக்கதக்க ஆற்றல் துறையில் லாபம் 60% அதிகரித்துள்ளது. நடப்பு காலாண்டில் மிகப் பெரியளவிலான சோலார் திட்டங்களையும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது மேற்கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tata power announced profit jump 28% to Rs.503 crore in march quarter
Tata power announced profit jump 28% to Rs.503 crore in march quarter/டாடா பவரின் சூப்பரான அறிவிப்பு.. Q4ல் ரூ.503 கோடி லாபம்.. முதலீட்டாளர்கள் ஹேப்பி..!