தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளின் கடன் தள்ளுபடி- ராகுல் காந்தி உறுதி

வாரங்கல்:
தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, வாரங்கல் பகுதியில் விவசாயிகள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தெலுங்கானாவை ஏமாற்றிய நபருடன்(சந்திரசேகர ராவ்) எங்கள் கட்சி ஒருபோதும்(கூட்டணி) ஒப்பந்தம் செய்து கொள்ளாது. மாநிலத்தில் இருந்து கோடிக்கணக்கான பணம் திருடப்பட்டது
காங்கிரஸ் ஒருபோதும் அவர்களுடன்(டிஆர்எஸ்) ஒப்பந்தம் செய்து கொள்ளாது என்று பாஜகவுக்குத் தெரியும், அதனால்தான் தெலுங்கானாவில் டிஆர்எஸ் ஆட்சியை பாஜக விரும்புகிறது. தெலுங்கானா முதல்வர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் திருடலாம் என்பதும், மத்திய பாஜக அரசு அவரது மாநிலத்திற்கு அமலாக்கத்துறையை அனுப்பவில்லை என்பதும் இதற்கு ஆதாரம்.
நீங்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவராக இருந்தாலும், எவ்வளவு பெரியவராக இருந்தாலும், தகுதியின் அடிப்படையில் தேர்தலில் காங்கிரஸ் டிக்கெட் வழங்கப்படும். 
தெலுங்கானா  மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், அவர்களது விதவை மனைவிகள் கதறி அழுகிறார்கள், அதற்கு யார் பொறுப்பு?.
தேர்தலில் டிஆர்எஸ் கட்சியை வீழ்த்துவோம், காங்கிரஸுக்கும், டிஆர்எஸ்-க்கும் இடையே சட்டசபைத் தேர்தலில் நேரடிப் போட்டி. தெலுங்கானா கனவை சிதைத்து இளைஞர்களிடம் லட்சக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்களை மன்னிக்க மாட்டோம்.
தெலுங்கானா விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். 
மேலும் உங்களுக்கு (விவசாயிகளுக்கு) சரியான குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கும். இது சில மாதங்களில் (காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன்) நடைபெறும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.