ஜூலை மாதம் முதல் ஆகாசா ஏர்லைன்ஸ் பறக்கத் தொடங்கலாம்.. இனி கடும் போட்டி தான்!

இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனம், ஜூலை மாதம் முதல் தனது வணிக செயல்பாட்டினை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏர் ஆப்ரேட்டர் அனுமதியினை தவிர மற்ற அனுமதிகளையும் பெற்றுவிட்டதாகவும், அனைத்து விதமான ஒப்புதல்களையும் பெற்றுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான சேவையை வழங்கவுள்ளதாக ராகேஷ் ஜுன் ஜுன்வாலா கூறியிருந்த நிலையில், விரைவில் இந்த விமான நிறுவனம் விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாகர்மாலா திட்ட நிதி 6.5 லட்சம் கோடியாக அதிகரிப்பு..!

விமானங்களுக்கு ஆர்டர்

விமானங்களுக்கு ஆர்டர்

இந்த விமான சேவைகளை வழங்குவதற்காக ஆகாசா நிறுவனம் 77 போயிங்க் 737 மேக்ஸ் விமானங்களுக்கு ஆர்டர்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஜூன் மாதம் ஆர்டரினை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் தற்போதைக்கு 150 விமானிகளும், 120 விமான பணிப்பெண்களும் உள்ளனர்.

எப்போது விமானம் கிடைக்கும்?

எப்போது விமானம் கிடைக்கும்?

இது குறித்து ஆகாசா ஏர்-ன் நிர்வாக தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான வினய் துபே, சிஎன்பிசி டிவிக்கு அளித்த பேட்டியில், ஜூன் நடுப்பகுதியில் எங்களுக்கான முதல் விமானம் டெலிவரி செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இதனையடுத்து எங்களது விமான சேவையினை ஜூலை மாத இறுதியில் வணிக ரீதியாக செயல்பட தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கெங்கு செயல்பாடு?
 

எங்கெங்கு செயல்பாடு?

விமான ஆப்ரேட்டரின் அனுமதியினை பெறுவதற்கு முன்பு, நாங்கள் விமான டெலிவரியை பெற வேண்டும். இது மிகவும் கடுமையான செயல்முறையாகும். ஆக ஜூன் மாதம் அது எங்களுக்கு கிடைக்கலாம். ஜூலையில் செயல்படத் தொடங்குவோம் என தெரிவித்துள்ளார்.

யாருக்கு எவ்வளவு பங்கு?

யாருக்கு எவ்வளவு பங்கு?

இந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இணை இயக்குநரும், நிறுவனத்தின் 40% உரிமையாளரும் ஆவார். இண்டிகோவின் முன்னாள் தலைவரான ஆதித்யா கோஷ் ஆகாசா ஏர் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளைப் பெற்றுள்ளார். முன்னாள் ஜெட் ஏர்வேஸ் சிஇஓ வினய் துபே 15 சதவீத பங்குகளுடன் ஆகாசா ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிப்பார் என்றும் முன்பே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Akasa air to start commercial operations in coming july

Akasa air to start commercial operations in coming july/ஜூலை மாதம் முதல் ஆகாசா ஏர்லைன்ஸ் பறக்கத் தொடங்கலாம்.. இனி கடும் போட்டி தான்!

Story first published: Friday, May 6, 2022, 23:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.