நிலம் வாங்க மானியம் – வேலைவாய்ப்பு பயிற்சி உள்பட பல்வேறு அறிவிப்புகள்! அமைச்சர் கயல்விழி தகவல்…

சென்னை: எஸ்.சி, எஸ்.டி தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம், ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பதில்அளித்த அமைச்சர்  கயல்விழி,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய உதவித்திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி நிலவரங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில், அவர் தாக்கல் செய்த  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்  கொள்கை விளக்கக் குறிப்பில் மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி,

200 நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாய தொழிலாளர் நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும்.

1,000 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் துரித மின் இணைப்புத் திட்டத்தில் இணைப்பு திட்டத்தில் மின் இணைப்பு பெற மானியம் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு மானிய உதவித் திட்டம் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் சார்பாக 90 சதவீத வைப்புத் தொகை செலுத்தி இலவச மின் இணைப்பு வழங்க, 1,827 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.28.65 கோடி செலவிடப்பட்டுள்ளது.

புதிய மைன் மோட்டார் வாங்க 1800 ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் 200 பழங்குடியின விவசாயிகள் என மொத்தம் 2000 பேருக்கு ஒரு விவசாயிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் நிலம் வாங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.175 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மானியத்துடன் கூடிய கடன் (நிலம் வாங்கும் திட்டம் – நில மேம்பாட்டுத் திட்டம்) நிலமற்ற ஆதி திராவிட மகளிரை நில உடமையாளர்களாக்கி அவர்களது சமூக நிலையினை உயர்த்திட சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணாக்கர் விடுதிகளில் ஆண்டுக்கு 3 முறை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள், 90 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளில் ரூ.50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஆதிதிராவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அழிவின் விளிம்பில் உள்ள தோடர், கோத்தர், குரும்பர், இருளர், பணியர் மற்றும் காட்டுநாயக்கன் ஆகிய 6 பண்டைய பழங்குடியினரின் இனவரவியல் மற்றும் கலாசாரங்கள் அழியா வண்ணம் பாதுகாக்க, ஒலி/ஒளி ஆவணமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பதிவு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

மகளில் இல்லாத குடும்பங்களில் ஆண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். மேலும் ஆதி திராவிடர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் பழங்குடியினருக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.