#ஷவர்மா || ரசாயனப்பொடி தடவிய கோழி இறைச்சி பறிமுதல்.! 

நாமக்கல் மாவட்டத்தில் ரசாயன வண்ணப் பொடிகள் தடவிய 12 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஷவர்மா என்ற உணவை உண்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் ஷவர்மா தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில் ரசாயனப் பொடிகள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்க வைத்திருந்த 12 கிலோ கோழி இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், அந்த உணவகத்திற்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

இதேபோல், நாகை திருவாரூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.