1000% மேல் டிவிடெண்ட் கொடுத்த இந்த 2 லார்ஜ் கேப் பங்கினை வாங்கலாம்.. ஏன்.. நிபுணர்களின் கணிப்பு?

லார்ஜ் கேப் நிறுவனங்களான ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உள்ளிட்ட இரு நிறுவனங்களுமே மார்ச் காலாண்டில் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.

இதில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ள நிலையில், டிவிடெண்டாக 1750 சதவீதம் அல்லது ஒரு பங்குக்கு 35 ரூபாயினை அறிவித்துள்ளது. (முக மதிப்பு ஒரு ஈக்விட்டி பங்குக்கு 2 ரூபாய்).

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் (முக மதிப்பு 1 ரூபாய்) 5650% அல்லது 56.50 ரூபாய் ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு: டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இணையாக வளரும் விவசாயப் பொருளாதாரம்..!

பங்கினை வாங்கலாம்

பங்கினை வாங்கலாம்

இந்த பங்கினை ஷேர்கான் தரகு நிறுவனம் இப்பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதன் அவுட்லுக் மிக வலுவாக காணப்படுகிறது.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் எபிட்டா விகிதம் 4வது காலாண்டில் எதிர்பார்ப்பினை விட குறைவாகவே உள்ளது. எனினும் தொடர்ந்து நாட்டில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2023ம் நிதியாண்டில் வளர்ச்சி விகிதமானது இரு இலக்கில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தேவையானது கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் வலுவான தேவையினை கண்டுள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் விழாக்கள் மற்றும் திருமண விழாக்கள் என அதிகம் இருந்தன. அதோடு பருவ மழையும் சரியாக இருந்தால் தேவையினை ஊக்குவித்துள்ளது.

ஏற்றுமதியில் கவனம்
 

ஏற்றுமதியில் கவனம்

நிறுவனம் கிராமப்புறத் தேவையானது இனி வரும் காலங்களிலும் வலுவான தேவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிறுவனம் தொடர்ந்து ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில் அதுவும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். கடந்த 2022ம் நிதியாண்டில் 5% ஆக இருந்த ஏற்றுமதி, 2025ல் 15% வளர்ச்சி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மின்சார வாகன உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகின்றது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் 4வது காலாண்டில் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இதன் வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 13% அதிகரித்து, 3550.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2வது காலாண்டாகவே வளர்ச்சி விகிதமானது வலுவான வளர்ச்சியினைக் கண்டுள்ளது;.

டிவிடெண்ட்

டிவிடெண்ட்

மூலதன பணவீக்கமானது 17% அதிகரித்துள்ளது. இது மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தற்போது தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது. 2022ம் நிதியாண்டில் டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 69 ரூபாய் அறிவித்துள்ளது. (இது கடைசி டிவிடெண்ட் 56.5 ரூபாயினையும் சேர்த்து)

 

Disclaimer: This recommendations made above are those of individual analysts or broking companies, and not for good returns

இப்படி பல சாதகமான காரணிகளுக்கு மத்தியில் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம். அதன் இலக்கு விலையானது 4000 ரூபாயாகவும் மதிப்பிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

sharekhan suggest 2 large Cap stocks to buy : do you have it?

sharekhan suggest 2 large Cap stocks to buy : do you have it?/1000% மேல் டிவிடெண்ட் கொடுத்த இந்த 2 லார்ஜ் கேப் பங்கினை வாங்கலாம்.. ஏன்.. நிபுணர்களின் கணிப்பு?

Story first published: Friday, May 6, 2022, 19:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.