ஸ்விகியில் காபி ஆடர் செய்தவர்க்கு டெலிவரி பாய் கொடுத்த ஷாக்!

இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்துகொண்டு இருக்கும் முக்கிய நகரங்களில் முதலிடத்தில் இருப்பது பெங்களூரு. இங்கு உணவு டெலிவரி நிறுவனங்கள் பல உணவு ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை வழங்கப் போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன.

வாரிக் கொடுக்கும் வங்கிகள்.. 4 ஆண்டுகளில் இல்லாதளவு 11 -12% வளர்ச்சி இருக்கலாம்..!

இப்படிப்பட்ட சேவைகளுக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் அதேநேரம், வேகமான இந்த உலகில் இந்த சேவையும் தேவை என பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

 சுவாரஸ்யங்களும் பிரச்சனைகளும்

சுவாரஸ்யங்களும் பிரச்சனைகளும்

மறுபக்கம் இது போன்ற டெலிவரி நிறுவனங்களால் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும், பிரச்சனையை ஏற்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறத்தான் செய்கின்றன. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் சேவையை மெருகேற்றுகின்றனர்.

 காபி ஆடர்

காபி ஆடர்

பெங்களூருவில் ஓம்கார் ஜோஷி என்பவர் டிவிட்டரில் பகிர்ந்த வாட்ஸ்அப் கலந்துரையாடலில், ஸ்விகி உணவு டெலிவரி சேவையைப் பயன்படுத்தி காபி டேவில் காபி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டரை காபி டே சென்று பிக்-அப் செய்த ஸ்விகி டெலிவரி பாய் அடுத்த செய்த சம்பவம் தான் பேசு பொருளாக மாறியுள்ளது.

 சோம்பேறித்தனம்
 

சோம்பேறித்தனம்

காபி டெலிவரி செய்யச் செல்ல சோம்பேறித் தனமாக இருந்ததால், டன்சோ செயலியில் டெலிவரி செய்ய வேண்டிய முகவரியை அளித்து, அவர்களை டெலிவரி செய்ய வைத்துள்ளார்.

 ரேட்டிங் கொடுங்க அண்ணே

ரேட்டிங் கொடுங்க அண்ணே

அப்படி டெலிவரி செய்து இருந்தால் மட்டும் விட்டு இருக்கலாம். காபி ஆர்டர் செய்த வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு, டன்சோவில் உங்கள் காபியை அனுப்பிவிட்டேன். தனது சேவைக்கு 5 ஸ்டார் ரேட்டிங் அளிக்குமாறும் கேட்டுள்ளார்.

சாமர்த்திய தனம்

சாமர்த்திய தனம்

ஸ்விகி டெலிவரி பாயின் இந்த சாமர்த்திய தனத்தை இப்போது சமுக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து வைரல் செய்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bengaluru man orders coffee from Swiggy. See what the delivery agent did?

Bengaluru man orders coffee from Swiggy. See what the delivery agent did? | ஸ்விகியில் காபி ஆடர் செய்தவர்க்கு டெலிவரி பாய் கொடுத்த ஷாக்!

Story first published: Friday, May 6, 2022, 16:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.