15 நிமிடத்தில் 5 லட்சம் கோடி இழப்பு.. மும்பை பங்குச்சந்தை சரிவுக்கு 5 காரணம்!!

இந்திய ரீடைல் முதலீட்டாளர்களுக்கு வியாழக்கிழமை வர்த்தகமே மிகப்பெரிய சரிவை எதிர்கொண்ட நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முதல் 15 நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தையின் பங்குகள் கிட்டத்தட்ட ரூ. 5 லட்சம் கோடி அளவிலான சந்தை மதிப்பை இழந்தன. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் சராசரியாக 1 பங்கு உயர்வில் இருந்தால் 6 பங்குகள் சரிவில் இருந்தது.

ஓரே நாளில் ரூ.6.27 கோடி இழப்பு.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

பிஎஸ்இ சந்தை மூலதன மதிப்பு வியாழக்கிழமை ரூ.259.64 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.8 லட்சம் கோடி சரிந்து ரூ.254.83 லட்சம் கோடியாகக் குறைந்து முதலீட்டாளர்களுக்கும் பெரும் பாதிப்பை அளித்தது. சென்செக்ஸ் குறியீடுன் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பெரும்பாலான பங்குகள் சரிவில் இருந்தது.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப்

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப்

சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் பதிவு செய்த 1100 புள்ளிகள் சரிவில் இருந்து ஓரளவு மீண்டு வந்தாலும், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் இன்னும் 2 சதவீதம் வரையில் சரிவுடனே உள்ளது.

ஆசிய சந்தை
 

ஆசிய சந்தை

இந்தியாவின் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி50 ஆகியவை 1 சதவீதத்திற்கும் மேலாகச் சரிவை பதிவ செய்துள்ள நிலையில், பிற ஆசிய சந்தை குறியீடுகள் 4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இந்நிலையில் இந்திய பங்குச்சந்தையின் இன்றைய சரிவுக்கான 5 காரணங்கள் இதுதான்.

 

மத்திய வங்கிகள்

மத்திய வங்கிகள்

வியாழக்கிழமை இங்கிலாந்து பொருளாதாரம் 2023 இல் சுருங்கக்கூடும் கணித்து வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தியது. இதோடு 2022ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் எனப் பேங்க் ஆப் இங்கிலாந்து கணித்துள்ளது.

புதன்கிழமை அமெரிக்க மத்திய வங்கி தனது நாணய கொள்கையில் 50 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது. இது 22 ஆண்டுகளில் மிகப்பெரிய உயர்வாகும்.

 

எண்ணெய் விலை உயர்வு

எண்ணெய் விலை உயர்வு

தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன, உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றி எவ்விதமான எண்ணமும் இல்லாமல் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் ஐரோப்பா ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைக்கிறது.

 

பலவீனமான அமெரிக்கப் பொருளாதார

பலவீனமான அமெரிக்கப் பொருளாதார

அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி மார்ச் காலாண்டில் 1.4 சதவீதம் சுருங்கிய நிலையில், அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தரவுகள் படி அமெரிக்காவில் இன்னும் வேலைவாய்ப்புச் சந்தைகள் மோசமாகவே இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதேபோல் கடந்த வாரம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 200000 ஆக உயர்ந்துள்ளது.

FPI வெளியேற்றம்

FPI வெளியேற்றம்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்நாட்டுப் பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்து வரும் காரணத்தால் பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்பும் சரிகிறது.

இந்த மே மாதத்துடன் தொடர்ந்து எட்டாவது மாதமாகும் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை வெளியேற்றி வருகின்றனர்.

 

ரிலையன்ஸ், எல்ஐசி

ரிலையன்ஸ், எல்ஐசி

இந்நிலையில் இன்றைய வர்த்தகப் போக்கை மாற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள், எல்ஐசி ஐபிஓ-வில் அதிகப்படியான முதலீடுகள் அளவுகள் ஆகியவற்றுக்கு மட்டுமே சக்தி உள்ளது.

ஆனால் ரிலையன்ஸ் டிசம்பர் காலாண்டு விடவும் மார்ச் காலாண்டில் குறைவான லாபத்தைப் பதிவு செய்யும் என எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் ரிலையன்ஸ் பங்குகளும் சரிவுடன் உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sensex crash today: Stock Market Investor lost Rs 5 lakh crore mcap; 5 reason behind todays fall

Sensex crash today: Stock Market Investor lost Rs 5 lakh crore mcap; 5 reasons behind today’s fall 15 நிமிடத்தில் 5 லட்சம் கோடி இழப்பு.. மும்பை பங்குச்சந்தை சரிவுக்கு 5 காரணம்!!

Story first published: Friday, May 6, 2022, 14:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.