ஹவானா:வட அமெரிக்க நாடான கியபாவில், ஹோட்டலில் காஸ் கசிந்து ஏற்பட்ட விபத்தில், நான்கு பேர் இறந்தனர், பலர் காயம் அடைந்தனர். கியூபா தலைநகர் ஹவானாவில், ௧௯ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடம் ஒன்றில், ‘ சரடோகா’ என்ற ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. ௯௬ அறைகள் அடங்கிய இந்த ஹோட்டல் நேற்று காலை வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.அப்போது, ஹோட்டலில் பயங்கர வெடி சத்தம் கேட்டது.
அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பலரை மீட்டு, மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு நான்கு பேர் இறந்தனர்,. மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. ஹோட்டலில் சமையல் காஸ் கசிந்ததால், இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஹவானா:வட அமெரிக்க நாடான கியபாவில், ஹோட்டலில் காஸ் கசிந்து ஏற்பட்ட விபத்தில், நான்கு பேர் இறந்தனர், பலர் காயம் அடைந்தனர்.கியூபா தலைநகர் ஹவானாவில், ௧௯ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.