Tamil News Live Update: திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு.. தாயிடம் ஆசி பெற்ற முதல்வர் ஸ்டாலின்!

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

வங்கக் கடலில் உருவாகிறது புயல்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை புயலாக வலுப்பெறும். இது ஆந்திரா- ஒடிசா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

IPL 2022: மும்பை அணி திரில் வெற்றி!

ஐ.பி.எல் போட்டியில் நேற்று, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் இலக்குடன் ஆடிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து , வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Tamil Nadu news live update

சமையல் எரிவாயு விலை உயர்ந்தது!

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ரூ. 50 உயர்ந்து ரூ.1,015க்கு விற்பனை  செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 50 அதிகரித்த நிலையில் மீண்டும் விலை உயர்வு சாமானிய மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 விக்னேஷ் கொலை.. 2 காவலர்கள் கைது!

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில், தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது.

இலங்கையில் அவசரகால சட்டம் அமல்!

இலங்கையில் வெள்ளிக்கிழமை இரவு நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமல்படுத்தி, அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை கண்டித்து தொடரும்  மக்கள் போராட்டத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
09:32 (IST) 7 May 2022
திமுக ஓராண்டு நிறைவு.. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்து!

09:30 (IST) 7 May 2022
அரசுப் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் பயணம்!

திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு ஆன நிலையில், சென்னை, ஆர்.கே.சாலையில் அரசுப் பேருந்தில், பொது மக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார். அப்போது இலவச பேருந்து திட்டம் குறித்து பெண் பயணிகளிடம் கேட்டறிந்தார்.

09:28 (IST) 7 May 2022
ஜூன் 9 இல் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்!

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், இவர்களது திருமணம், ஜூன் 9 ஆம் தேதி, திருப்பதி கோயிலில் வைத்து நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

09:08 (IST) 7 May 2022
தாயிடம் வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், சென்னை, கோபாலபுரத்தில் தாயார் தயாளு அம்மாள், அண்டை வீட்டினரிடம் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

09:07 (IST) 7 May 2022
இலங்கை தமிழர்கள் கைது!

தமிழகத்துக்கு படகில் வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

09:06 (IST) 7 May 2022
திமுக ஓராண்டு நிறைவு.. ஓபிஎஸ் விமர்சனம்!

மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி, திமுகவின் ஓராண்டு ஆட்சி. முக்கிய வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை. பெட்ரோல் – டீசல் விலை, 7 பேர் விடுதலை, பூரண மதுவிலக்கு குறித்து தற்போது பேசாதிருப்பது ஏன்? என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

09:06 (IST) 7 May 2022
இலங்கை தமிழர்கள் கைது!

தமிழகத்துக்கு வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

09:06 (IST) 7 May 2022
நீதிபதிகள் நியமனம்.. கொலீஜியம் பரிந்துரை!

டெல்லி, பீகார், ஆந்திர மாநில உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்ய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

09:06 (IST) 7 May 2022
திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு!

திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

09:05 (IST) 7 May 2022
சட்டப் பேரவையில் இன்று!

தமிழக சட்டப் பேரவையில் இன்று திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, ஆளுநர், அமைச்சரவை, நிதித்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவை ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

09:05 (IST) 7 May 2022
42,024 மாணவர்கள் தேர்வெழுதவில்லை!

10 ஆம் வகுப்பு வெள்ளிக்கிழமை (மே. 7) பொதுத்தேர்வு தொடங்கியது. 3,936 தேர்வு மையங்களில் 9.55 லட்சம் பேர் தேர்வு எழுதவிருந்த நிலையில், 42,024 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளத்து.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.