லேர்சன் & டூப்ரோ இன்ஃபோடெக் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்கள் குழு மைண்ட்ட்ரீ நிறுவனத்துடன் இணைவதற்கான ஒப்புதலை வழங்கிவிட்தாக வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எல்&டி இன்போடெக் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளும், மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் 61 சதவீத பங்குகளும் லேரசன் & டூப்ரோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே இரண்டு நிறுவனங்களும் இணைவது குறித்து அவ்வப்போது பேச்சுவார்த்தையை நடத்தி வந்தன.
இந்தியாவின் 100 யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 23 மட்டுமே லாபம் அளிக்கும் நிறுவனங்கள்!

எல்டிஐ மைண்ட்ட்ரீ
எல்&டி இன்போடெக், மைண்ட்ட்ரீ நிறுவனங்கள் முழுமையாக இணைந்த பிறகு எல்டிஐ மைண்ட்ட்ரீ என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு 68.73 சதவீத பங்குகள் லேர்சன் & டூப்ரோவுக்கு சொந்தமாக இருக்கும்.
மேலும் மைண்ட்ட்ரீ பங்குதாரர்களுக்கு 100 பங்குகளுக்கு 73 பங்குகளை எல்&டி இன்போடெக் வழங்க முடிவு செய்துள்ளது.

5வது மிகப்பெரிய ஐடி நிறுவனம்
எல்&டி இன்போடெக் நிறுவனத்திடம் 1.03 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனமும், மைண்ட்ட்ரீ நிறுவனத்திடம் 65,285 கோடி ரூபாய் சந்தை மூலதனமும் உள்ளது. இவ்விரண்டு நிறுவனங்களும் இணைந்ததால் டெக் மஹிந்தரா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் 5-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக ‘எல்டிஐ மைண்ட்ட்ரீ’ உருவெடுத்துள்ளது.

லாபம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்&டி இன்போடெக் – மைண்ட்ட்ரீ என இரண்டு நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. இரண்டு நிறுவனங்களும் இணைந்தால் வணிகம் இன்னும் விரிவடையும், செலவு மற்றும் ரிஸ்க் குறையும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

யார் அடுத்த சி.ஈ.ஓ?
இரண்டு நிறுவனங்கள் இணையும் போது எல்&டி இன்போடெக் தலைவர் சஞ்சய் ஜலோனா அல்லது மைண்ட்ட்ரீ தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் டெபாஷிஸ் சாட்டர்ஜி என யார் தலைமையில் இந்த நிறுவனம் செயல்படும் என்பதும் கேள்வியாக இருந்தது.
இந்நிலையில் சஞ்சய் ஜலோனா தனிப்பட்ட காரணங்களுக்கு எல்&டி இன்போடெக்கில் இருந்து வெளியேறுவதாகவும், மைண்ட்ட்ரீ தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் டெபாஷிஸ் சாட்டர்ஜி ‘எல்டிஐ மைண்ட்ட்ரீ’ சி.ஈ.ஓவாக தொடருவார் என கூறப்படுகிறது.

பங்குகள்
வெள்ளிக்கிழமை சந்தை நேர முடிவில் எல்&டி இன்போடெக் பங்குகள் 173.45 புள்ளிகள் சரிந்து 4,593.10 புள்ளிகளாகவும், மைண்ட்ட்ரீ பங்குகள் 136.25 புள்ளிகள் சரிந்து 3,374.65 ரூபாயாகவும் வர்த்தகமாகி இருந்தன.
L&T Infotech announced a merger with Mindtree and LTI Becomes India’s 5th Largest IT Company
L&T Infotech announced merger with Mindtree and Becomes India’s 5th Largest IT Company | இந்தியாவின் 5வது மிகப்பெரிய நிறுவனமானது ஐடி ‘எல்டிஐ மைண்ட்ட்ரீ’ !