மேற்கத்திய நாடுகள் மீது அணுகுண்டு வீசும் புடினுடைய உத்தரவை அலட்சியம் செய்யும் தளபதிகள்: என்ன காரணம் தெரியுமா?


ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதுமே அணு ஆயுதங்களை தயாராக வைத்துவிட்டார் புடின்.

ஆகவே, புடின் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்ற ஒரு அச்சம் உருவாகியது.

அவ்வப்போது ரஷ்ய தொலைக்காட்சியில் புடின் ஆதரவு ஊடகவியலாளர்களும் அணுகுண்டு வீசுவோம் என மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால், அப்படி புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டாலும், அவரது மூத்த இராணுவத் தளபதிகள் அவரது உத்தரவை நிறைவேற்றமாட்டார்கள் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதற்குக் காரணம், புடினுடைய உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர் இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவார் என்றும் பல மூத்த இராணுவத் தளபதிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும், ரஷ்ய செல்வந்தர்களும் நம்புகிறார்களாம்.

இந்த தகவலை வெளியிட்டுள்ள ரஷ்ய விவகாரங்கள் நிபுணரான Christo Grozev என்பவர், அப்படி புடினுடைய உத்தரவுக்கு இணங்கி அணுகுண்டு வீசினால், அதற்குப் பிறகு அவர் சீக்கிரம் உயிரிழந்துவிட, தாங்கள் சர்வதேச நாடுகள் முன் விசாரணைக்கு நிற்கவேண்டி வரும் என ரஷ்ய இராணுவத் தளபதிகள் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.

ஆகவே, புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டாலும், அவர்கள் புடினுடைய உத்தரவுக்கு அடிபணியமாட்டார்கள் என்று கூறியுள்ளார் Grozev.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.