ஜம்மு காஷ்மீரில் எல்லைத் தாண்டி ஊடுருவ சுமார் 200 தீவிரவாதிகள் காத்துக் கொண்டிருப்பதாக ராணுவத்தின் வடக்கு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் எல்லைக்கு அருகே சுமார் 35 தீவிரவாத முகாம்கள் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் எல்லையை கடந்து வரும் வகையில் ரகசிய சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடந்த புதன்கிழமை கண்டுபிடித்திருப்பதாகவும் ஜெனரல் உபேந்திரா தெரிவித்துள்ளார்.