ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ரஷ்யா மற்றும் உக்ரைன் கொடிகளுக்கு நகர அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 77 வது ஆண்டு நிறைவை இந்த வார இறுதியில் மக்கள் நினைவுகூரயிருக்கிறார்கள்.
இதன் போது நகரின் நினைவுச் சின்னங்களுக்கு அருகே ரஷ்ய மற்றும் உக்ரேனியக் கொடிகளை பறக்க விடுவதற்கு பெர்லினில் உள்ள அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து பெர்லின் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் ரஷ்யாவின் தற்போதைய போர் நடைபெற்ற வரும் சூழலில், தலைநகரில் நினைவுச்சின்னங்கள், நினைவுச்சின்னங்களுக்கான மரியாதை மற்றும் நினைவூட்டல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த போரினால் பெர்லினில் மோதல்கள் அல்லது தகராறுகளாக ஏற்பட அனுமதிக்கப்படக்கூடாது.
நகரில் உள்ள நினைவுச் சின்னங்களுக்கு அருகே ரஷ்ய மற்றும் உக்ரேனிய கொடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் ராணுவ இசையை இசைப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.