உடுப்பி:கர்நாடகாவில் முதல் முறையாக, உடுப்பி மல்பே கடற்கரையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
உடுப்பி மாவட்டம், மல்பே கடற்கரை துாய்மையானவை. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருவர்.படகு சவாரி, பாரா கிளைடிங் உட்பட நீர் விளையாட்டுகள் இருப்பதால் இளைஞர்கள் வார இறுதியில் குவிந்திருப்பர்.கடந்தாண்டு ரம்மியமான கடற்கரை பூங்கா அமைக்கப்பட்டது. இதை பார்த்து சுற்றுலா பயணியர் ரசிக்கின்றனர்.
தற்போது, கடலில் மிதக்கும் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் கூர்மாராவ் நேற்று திறந்து வைத்தார். கடற்கரையில் இருந்து மிதக்கும் பாலத்தின் மீது நடந்து செல்லும் போது, அலைகளுக்கு ஏற்றவாறு பாலமும் தள்ளாடும்.
அப்போது கடலில் விழாதவாறு தற்காத்து கொள்ள ‘லைப் ஜாக்கெட்’கள் கொடுக்கப்படும்.ஒரு வேளை கடலில் விழும் பட்சத்தில், அவர்களை காப்பாற்ற 25 நீர்மூழ்கி பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.முதல் நாளிலேயே சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் மிதக்கும் பாலத்தில் ஏறி மகிழ்ந்தனர். மாநிலத்திலேயே இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement