ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமானவர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் முதல் பல நாடுகள் தடைகள் விதித்தன.
அப்போது, புடினுடைய இரகசிய காதலி என கருதப்படும் Alina Kabaeva (38) என்னும் பெண்ணின் பெயரும் பரவலாக அடிபட்டது.
ஆனால், அவர் மீது தடைகள் விதித்தால், அது புடினை தனிப்பட்ட முறையில் தாக்குவது போலாகிவிடும் என்று கருதி அவர் மீது தடைகள் விதிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், தற்போது Alina மீது தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருகிறது.
அதற்கு முக்கிய காரணம் ஒன்றும் உள்ளது.
அதாவது இந்த Alina சிறிது காலமாக தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. அவர் சுவிட்சர்லாந்தில் தான் புடினுக்குப் பெற்ற பிள்ளைகளுடன் பதுங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், திடீரென சென்ற மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றி அதிர்ச்சி கொடுத்தார் Alina.
அந்த நிகழ்ச்சியின்போது, புடின் உக்ரைனை ஊடுருவியதற்கு ஆதரவளிப்பதாக கருதப்படும் Z என்ற எழுத்தின் முன் நின்று பேட்டியளித்த Alina, இரண்டாம் உலகப்போரில் நாஸிக்கள் மீதான வெற்றியை உக்ரைன் போருடன் ஒப்பிட்டுப் பேசினார்.
ஆகவே, தற்போது அவர் மீதும் தடைகள் விதிக்கப்பட உள்ளன.
இதற்கிடையில், இந்த Alinaவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் நீண்ட கால தொடர்பு இருந்துவந்துள்ளது. Alinaவுக்கும் புடினுக்கும் பிறந்த முதல் மகன் 2015ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவருக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து இந்த தகவல் கிடைத்துள்ளது.
Alinaவுக்கும் புடினுக்கும் பிறந்த இரண்டாவது மகன் 2019ஆம் ஆண்டு மாஸ்கோவில் பிறந்ததாக கூறப்படும் நிலையில், Alinaவுக்கு முதல் பிரசவம் பார்த்த அதே மகப்பேறு மருத்துவர் சுவிட்சர்லாந்திலிருந்து மாஸ்கோவுக்கு பறந்ததாக கூறப்படுகிறது.
புடினுடைய நம்பிக்கைக்குரியவரான அந்த மகப்பேறு மருத்துவர் இதுவரை அந்த இரகசியங்களை இரகசியங்களாகவே வைத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.