அதிமுக கொடி கட்டிய காரில் வந்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் மதுரை வீரன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
மாவட்டம் தோறும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து வரும் சசிகலா, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து சாலை மார்க்கமாக அதிமுக கொடி கட்டிய காரில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த சசிகலா, சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வருகை தந்த சசிகலாவுக்கு அதிமுக, அமமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து கோவிலில் அரைமணி நேர சாமி தரிசனம் செய்த சசிகலா, கிழக்கு கோபுரம் அருகில் உள்ள அவரது குலதெய்வமான மதுரை வீரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் சசிகலாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து காரில் இருந்தபடியே குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு சசிகலா சாக்லெட்டு;களை கொடுத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM