எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிச்சு பாருங்க… இந்த பிரச்சினை எல்லாம் பறந்து ஓடிவிடுமாம்!


நாம் எலுமிச்சை நம் உடலுக்கு பலவகையான நன்மை அளிக்கக்கூடிய ஒரு மருத்துவ பொருளாகும். தற்போது எலுமிச்சை சாறு அழகு கலைகளுக்கு அதிகளவு பயன்பட்டு வருகிறது.

இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் பயன்களும் இருக்கிறது. பல்வோறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கின்றது.

அதிலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன. இவை இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது. 

அந்தவகையில் தற்போது எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். 

  • எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடைக் குறையும். இதனால் உடலில் தனாக வளர்ச்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பதே இதற்குக் காரணம். உணவுக்கு முன்பும் ஒரு கிளாஸ் குடித்தால் அதிக உணவை உட்கொள்ள மாட்டீர்கள்.
  •  சளி, இருமல் போன்ற உடல் நலக் குறைவின் போது நோய் எதிர்ப்பு சக்தியையும், சுருசுருப்பான ஆற்றலையும் அளிக்கவல்லது. இதில் உள்ள வைட்டமின் C பல அற்புத நன்மைகளை உள்ளடக்கியது. 
  •  வயிற்றுக் குடல்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து உணவு செரிமானத்தை தடையின்றி செயல்பட உதவுகிறது.
  • உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குடித்தால் உடலில் நீரேற்றம் அதிகரிக்கும். 
  •  உடலின் நச்சுநீக்கியாகவும் செயல் படும். அதோடு தோல் , சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரல் ஆகியவற்றையும் சுத்தீகரிக்க உதவுகிறது.
  • பருக்களை நீக்கும், கொழுப்பை கரைக்கும், மூளையின் இயக்கத்தை சுருசுருப்பாக்கும். இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.