"உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சா் ஆக வேண்டும்" – செந்தில்குமார் எம்.பி.

உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சா் ஆக வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தருமபுரி சேலம் பிரதான சாலையில் அதியமான்கோட்டை அருகே கடந்த இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், “கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று பரவல் காரணங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால் பால பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து அறிவுறுத்தியதால், தற்பொழுது மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் மேம்பால பணிகள் முழுவதும் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
சேலம்-மேட்டூர் அணை ரயில் இயக்கத்தில் இன்று மாற்றம்- Dinamani
இங்கு கட்டப்பட்டுவரும் மேம்பாலம் வருங்காலத்தில் ரயில் பாதை விரிவாக்கம் செய்யும் வகையில் பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. தருமபுரி ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி ஏற்பாடு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. லிப்ட் வசதி அமையும் பொழுது முதியோர்கள் ரயிலில் பயணம் செய்ய சிரமமின்றி பயணம் செய்ய முடியும். தருமபுரி-மொரப்பூர் ரயில் திட்டத்திற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள நில அளவை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடைபெறும். இதில் எட்டு கிலோ மீட்டர் புதிய ரயில் பாதை அமைக்க இருந்த நிலையில், திட்டத்தில் ஐந்து கிலோ மீட்டர் ரயில் பாதை குறைத்து ரயில் திட்டம் நிறைவேற்றும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
Anbumani'S Challenger: A Hugging Millionaire!
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும் புதிய சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக சமூக வலைத் தளத்தில் வெளியான வீடியோக்கள் குறித்து கேட்ட கேள்விக்கு, “தரமில்லாத குறை கூறிய சாலைகளை ஒப்பந்ததாரர்கள் மீண்டும் புதிய சாலைகளாக அமைத்துள்ளனர். தரமில்லாத சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் கருப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உலக அளவிலான எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மையமாக அமைய உள்ளது” என்று பதிலளித்தார்.
dharmapuri district news: சாலை பணியில் ரூ.10 கோடி ஏப்பம்; இந்த ஊருலயா  இப்படி ஒரு மோசடி? - people are suffering as the road work in vathalmalai  village near dharmapuri has been stopped | Samayam Tamil
மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என அமைச்சர்கள் கூறிவரும் நிலையில் உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, அவர் “அமைச்சர் பதவி முதலமைச்சர் பார்வையில் உள்ளது. என் தனிப்பட்ட விருப்பம் விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது தான். ஒரு சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் அனைத்து வசதிகளும் முன்னேற்பாடுகளும் செய்து வருகிறார். ஒரு தொகுதியிலேயே அனைவரையும் ஒருங்கிணைத்து வேலை செய்து பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறார். அமைச்சர் பதவி வழங்கினால் அனைத்து தொகுதிகளுக்கும் சேவை செய்ய ஒரு வாய்ப்பாக இருக்கும். இது என் தனிப்பட்ட கருத்து. அனைத்து முடிவுகளும் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ளது.” என்று பதிலளித்தார்.
அரசு நிகழ்வொன்றும் கூவத்தூர் குலுக்கல் போட்டி அல்ல: உதயநிதி சீற்றம்!!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.