மதுரை: ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளை அவதூறாக பேசிய வழக்கில் தவ்ஹீத் ஜமா அத் மாநில நிர்வாகி ரஹ்மத்துல்லாவுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளை அவதூறாக பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கோரி நாளிதழ்களில் தமிழ், ஆங்கிலத்தில் கடிதம் வெளியிட வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.