பிரசாந்த் கிஷோரின் கருத்து முக்கியமில்லை! பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பீகாரில் 300 கிலோ மீட்டர் நடைபயணம் சென்று மக்களை சந்திக்க இருப்பதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அவரது கருத்து கருத்து முக்கியம் அல்ல என  தெரிவித்து உள்ளார்.

திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஜெகன்மொகன் ரெட்டி உள்பட பலரது வெற்றிக்கு துணைபுரிந்தவர் தேர்தல் திட்ட வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர். இவர் 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைப்பது தொடர்பாக காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், மற்றொருபுறம் அவர் தெலுங்கானா ராஷ்ரிய சமிதி கட்சியுடன் தேர்தல் ஒப்பந்தம் போட்டார். இதனால், பிரசாந்த் கிஷோரின் நம்பிக்கை விமர்சனத்துக்கு உள்ளாது. இந்த சூழலில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்து விட்டதாக தகவல் வெளியானது.  “காங்கிரசுக்கு என்னை விட, கட்சித் தலைமையே முக்கியம்” எனக் கூறி, காங்கிரசின் பேச்சுவார்த்தையில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து, அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், வரும் அக்டோபர் 2 முதல் பீகார் மாநிலத்தில்  மேற்கு சம்பாரண், காந்தி ஆசிரமத்தில் தொடங்கி கிட்டத்தட்ட பீகாரில் 3,000 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு, முடிந்தவரை மக்கள் அனைவரையும் சந்திக்க உள்ளேன். பீகாரில் இனி வருங்காலத்தில் தேர்தல் இல்லை என்பதால், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை. நான் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன். அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில், பொது நல்லாட்சி என்ற திட்டத்துடன் மக்களைச் சென்றடைய விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பு அவர் மாநிலத்தில் கட்சி தொடங்கி ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சி என விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், பீகாரில் நாங்கள் நல்லது செய்தோமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும். ஒருவரின் (பிரசாந்த் கிஷோர்) கருத்து முக்கிய மில்லை. உண்மை தான் முக்கியம். எங்களது பணி குறித்து மக்களுக்குத் தெரியும். பீகார் மாநிலத்தில் என்னென்ன நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். பீகார் வளர்ச்சிப் பணிகள் குறித்து உங்களுக்குத் (பத்திரிகையாளர்கள்) தெரியும் என்பதால், நீங்களே பதில் சொல்லலாம். உண்மை நிலவரம் அறியாமல் கருத்து சொல்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு  கூறினார்.

பீகார் முதல்வராக திட்டமா? ஜெகன்மோகன் ரெட்டிக்கு வழங்கிய ஆலோசனையை தானே செயல்படுத்தும் பிரசாந்த் கிஷோர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.