பிரித்தானியாவில் அழகிய இளம்பெண்கள் இருவர் வந்து வீட்டின் கதவைத் தட்ட, திறந்த நபருக்கு தனக்கு ஏற்படப்போகும் இழப்பைக் குறித்து கொஞ்சமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கிலாந்திலுள்ள Wendover என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றின் கதவை இரண்டு இளம்பெண்கள் தட்டியிருக்கிறார்கள். .
அந்த வீட்டின் உரிமையாளர் கதவைத் திறக்க, தாங்கள் வீடுகளை சுத்தம் செய்பவர்கள் என்று கூறியிருக்கிறார்கள் அந்த பெண்கள்.
ஒரு பெண் தன் மொபைல் எண்ணைக் கொடுப்பதற்காக ஒரு துண்டுக் காகிதம் வேண்டும் என்று கேட்க, அந்த நபர் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து அந்த பெண்களும் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.
ஒரு பெண் அந்த நபர் கொடுத்த காகிதத்தில் ஏதோ ஒரு எண்ணை எழுத, மற்ற இளம்பெண் அந்த நபரைக் கட்டியணைத்திருக்கிறார்.
பிறகு முதல் பெண் ஏதோ ஒரு எண் எழுதப்பட்ட காகிதத்தைக் கொடுக்க, இருவருமாக அங்கிருந்து வேகமாக வெளியேறியிருக்கிறார்கள்.
பிறகுதான் அந்த நபர் தனது கையிலிருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் மாயமாகியிருப்பதை உணர்ந்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு எச்சரித்துள்ள பொலிசார், கடந்த ஆண்டில் மட்டும் அந்த இளம்பெண்கள் ஒருவரும் இதேபோல் 50 பேரை ஏமாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
தங்கள் அழகைக் காட்டி ஆண்களை சபலப்படவைத்து சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ரோலக்ஸ் முதலான கைக்கடிகாரங்களை திருடியிருக்கிறது இந்த பெண்கள் கும்பல்.
Wendover சம்பவத்தைத் தொடர்ந்து, தங்கள் 20 வயதுகளிலிருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாட்டவர்களான அந்த இளம்பெண்கள் இருவரையும் பொலிசார் வலை வீசி தேடி வருவதுடன், அத்தகைய பெண்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.