தி.மு.க-வின் ஓராண்டு ஆட்சியின் அலசல் தொடங்கி ஆளுநர் ரவி உடனான மோதல் வரை… ஜூனியர் விகடன் ஹைலைட்ஸ்!

மே 7-ம் தேதியுடன் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது தி.மு.க அரசு. வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா… ஆளுநருடனான மோதல் ஏன்… ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு டஃப் கொடுப்பதில் ஸ்கோர் செய்வது எந்த எதிர்க்கட்சி போன்றவை குறித்து முழுமையாக விவரிக்கும் ஜூனியர் விகடனின் இந்த இதழில் சிறப்பு கட்டுரைகள் என்னென்ன..?

கடந்த ஓராண்டில் ஸ்டாலினின் ஆட்சி, சாதித்த – சறுக்கிய விஷயங்கள் என்னென்ன?

கட்சியின் தலைவராக அரை நூற்றாண்டுக்காலம் இயங்கிய கருணாநிதி மறைந்துவிட்ட சமயத்தில், கட்சியை வழிநடத்தி தமிழ்நாட்டின் அரியணையையும் பிடித்தார் மு.க.ஸ்டாலின். ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தவருக்கு கொரோனா, மழைவெள்ளம், நிதிச்சுமை எனத் தொடக்கத்திலேயே குறுக்கே நின்றன பிரச்னைகள். ஆனாலும், களத்தில் இறங்கி பம்பரமாகச் சுழன்றார் ஸ்டாலின். திட்டங்கள், அறிக்கைகள், தீர்மானங்கள், கருத்துகள் எனப் பரபரப்புக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லாத வகையில் ஓராண்டு ஆட்சி நிறைவடைந்திருக்கிறது. பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டுகள், விமர்சனங்கள், விவாதங்கள் என அலையடிக்கின்றன ஆட்சி பற்றிய பலவிதமான கருத்துகள்… என ஓராண்டு தி.மு.க ஆட்சியின் கம்ப்ளீட் ஸ்கேன் ரிப்போர்ட், கவர் ஸ்டோரியில்…

தி.மு.க-வின் ஓராண்டு ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் எப்படி?!

ஓராண்டு தி.மு.க ஆட்சியில், “கவர்னர்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்” என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.கதான் என்ற போதிலும், பா.ஜ.க அதை ஓவர் டேக் செய்கிறதா..?! எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்த ஓர் அலசல்…

தி.மு.க அமைச்சரவை ஓராண்டு நிறைவு… சாதித்தது யார்… சறுக்கியது யார்?!

பி.டி.ஆர் மீது வைக்கப்படும் விமர்சனம் என்ன..? ‘சர்ச்சைகளின் நாயகன் செந்தில் பாலாஜி’ என்ற குற்றச்சாட்டு ஏன்..?
சாதனையும் இல்லாமல், சறுக்கவும் இல்லாமல் தப்பித்த அமைச்சர் யார்… என திமுக அமைச்சர்களில் ஸ்கோர் செய்தவர்களையும் சறுக்கியவர்களையும் விவரிக்கும் விரிவான அலசல்…

தி.மு.க ஓராண்டு ஆட்சி: வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? – சொன்னதும் செய்ததும்!

பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக தி.மு.கவினர் சொல்லி வரும் நிலையில், “சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. இந்த ஓராண்டு ஆட்சிதான் அடுத்து நடக்கவுள்ள நான்கு ஆட்சிக்கான சாம்பிள்” எனக் குற்றம் சாட்டுகின்றனர் அ.தி.மு.கவினர். உண்மை நிலவரம் என்ன… ஓர் அலசல்!

ஓராண்டு ஆட்சி: ஆளுநர் ரவி Vs முதல்வர் ஸ்டாலின்… தொடரும் மோதல் அரசியல்!

ஓராண்டு தி.மு.க ஆட்சியில் ஆளுநரை மிகவும் டென்ஷனாக்கிய விஷயம் எது? ஆளுநர் – தி.மு.க மோதலை டெல்லி ஏன் தொடர்ந்து சூட்டோடு வைத்திருக்கப் பார்க்கிறது..? இந்த விவகாரத்தில், ஆதாயம் யாருக்கு? விரிவாக விவரிக்கும் சிறப்புக் கட்டுரை…

இப்படி இந்த இதழில் ஜூனியர் விகடனின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் ஜூனியர் விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் முழு விவரங்கள்

* ரூ.1749 மதிப்பிலான 1 வருட விகடன் ஆன்லைன் சந்தா தற்பொழுது ரூ.949 மட்டுமே! மேலும் இதனுடன் 1 மாத சந்தா + ரூ. 100 மதிப்புள்ள E-Books இலவசமாகப் பெறுங்கள்.

* ரூ.2,998 மதிப்பிலான 2 வருட விகடன் ஆன்லைன் சந்தா தற்பொழுது ரூ.1,799 மட்டுமே! மேலும் இதனுடன் 2 மாத சந்தா + ரூ. 200 மதிப்புள்ள E-Books இலவசமாகப் பெறுங்கள்.

* ரூ.19,999 மதிப்பிலான விகடன் ஆன்லைன் ஆயுள் சந்தா தற்பொழுது ரூ.9,999 மட்டுமே! மேலும் இதனுடன் ரூ. 500 மதிப்புள்ள E-Books + ரூ.250 மதிப்பிலான அமேசான் கிப்ட் கார்ட் பரிசாக வழங்கப்படும்.

விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.