8 மாதத்தில் 44.73 பில்லியன் டாலர் மாயம்.. ரிசர்வ் வங்கி அடுத்தது என்ன செய்யும்..?!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 செப்டம்பரில் 642.45 பில்லியன் டாலர் என்ற வரலாற்று சாதனையை எட்டிய எட்டு மாதங்களுக்குப் பிறகு, இப்போது 600 பில்லியன் டாலருக்கும் கீழே சரிந்துள்ளது.

இந்த 8 மாதத்தில் 44.73 பில்லியன் டாலர் வெளியேற்ற என்ன காரணம்..? இதனால் இந்தியாவுக்கும் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு..?

வாராக்கடன் அதிகரிப்பு.. 600 கிளைகளை மூடும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா!

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 2.69 பில்லியன் டாலராக குறைந்து 597.72 பில்லியன் டாலராக உள்ளது. இந்த வீழ்ச்சியுடன், அந்நிய செலாவணி கையிருப்பு செப்டம்பர் 3, 2021 அன்று பதிவு செய்யப்பட்ட 642.45 பில்லியன் டாலரில் இருந்து 44.73 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நாணய சொத்துக்கள்

வெளிநாட்டு நாணய சொத்துக்கள்

இந்தியாவின் ஒட்டுமொத்த கையிருப்புகளின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்களின் (FCAs) வீழ்ச்சியின் காரணமாக இந்தச் சரிவு ஏற்பட்டது. அந்நிய செலாவணி சொத்துக்களில் டாலர் மட்டும் அல்லாமல் யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்க டாலர் அல்லாத நாணயங்களின் வளர்ச்சி மற்றும் சரிவும் எதிரொலிக்கும்.

FPI முதலீட்டாளர்கள்
 

FPI முதலீட்டாளர்கள்

அந்நிய செலாவணி கையிருப்புக் குறைவதற்கு ஒரு முக்கியக் காரணம் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களால் (FPIs) மூலதன வெளியேற்றம் தான். FPI முதலீட்டாளர்கள் செப்டம்பர் 2021 முதல் சுமார் 21.43 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை வெளியேற்றினர்.

பெடரல் ரிசர்வ்

பெடரல் ரிசர்வ்

இதற்கு முக்கியக் காரணமாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் நாணய கொள்கையில் இருந்த தளர்வுகள் குறைத்தது மற்றும் வட்டி விகிதத்தை உயர்த்தியது தான். மார்ச் மாதத்தில் FPI முதலீட்டாளர்கள் சுமார் 6.56 பில்லியன் டாலர்களை வெளியேற்றியது மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

ரஷ்யா-உக்ரைன் போர்

ரஷ்யா-உக்ரைன் போர்

ரஷ்யா-உக்ரைன் போர் வாயிலாகக் கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது, மற்ற நாணய மதிப்பின் வீழ்ச்சியைத் தாண்டி டாலருக்கான தேவையும் அதிகமானது. அன்னியச் செலாவணி கையிருப்புச் சரிவில் தங்கத்தின் விலை வீழ்ச்சியும் ஒரு பங்கு வகிக்கிறது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

வெள்ளிக்கிழமை, ரூபாய் மதிப்பு 57 பைசா சரிந்து 76.96 என்ற வரலாற்றுச் சரிவான 76.97 க்கு சற்றுக் கீழ் அளவை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிராக 76.92 இல் முடிவடைந்தது. ரூபாய் மேலும் சரிந்தால், ரிசர்வ் வங்கி தனது அந்நிய செலாவணி இருப்பில் இருந்து டாலர்களை விற்பதன் மூலம் ரூபாய் மதிப்பின் இழப்பைச் சரி செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s forex fell below $600bn; capital outflows$44.73 billion in 8 months

India’s forex fell below $600bn; capital outflows$44.73 billion in 8 months 8 மாதத்தில் 44.73 பில்லியன் டாலர் மாயம்.. ரிசர்வ் வங்கி அடுத்தது என்ன செய்யும்..?!

Story first published: Saturday, May 7, 2022, 22:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.