பொதுவாக பலரும் நடைபயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது என்று கூறுவார்கள்.
அதிலும் தினசரி அட்டவணையில் 30 நிமிடங்கள் செலவிட முயற்சி எடுத்து நடைப்பயிற்சி செய்யுங்கள்.
அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மற்றும் நல்வாழ்விற்கும் மிகவும் நன்மை தரும்.
தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- நடைப்பயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சி செய்வது, உங்கள் உடலை சுறுசுறுப்பாகவும் மற்றும் உங்கள் எடையை நிர்வாகிக்கவும் உதவும் மேலும் உடல் பருமனாவதையும் தடுக்கும்.
- நடைப்பயிற்சி இதயத்திற்கு மிகவும் நல்லது தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது இதய நோயின் அபாயத்தை குறைக்கும்.
- நடைப்பயிற்சி செய்வது புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றது.
- தினசரி 30 நிமிடங்கள் நடப்பதனால் உங்களை நோயில் இருந்தும் மற்றும் நோய்த்தொற்றில் இருந்தும் சுலபமாக பாதிக்கப்படுவதை குறைக்கிறது.
- தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்களை சுறுசுறுப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைப்பது மட்டுமின்றி, உங்கள் மன அழுத்த அளவுகளையும் குறைகிறது.
- நடக்கும் போது, உங்கள் பாதமும் மற்றும் கைகளும் தொடர்ந்து அசைந்துகொண்டு இருக்கிறது. இறுதியில் முறையான நடைப்பயிற்சி உங்கள் எலும்புகளையும் மற்றும் உங்கள் தசைகளையும் உறுதியாக்குகிறது.
- உறுதியான எலும்புகளும் மற்றும் தசைகளும் உங்கள் ஒருங்கிணைப்பையும் மற்றும் சமநிலையையும் அதிகரிக்கிறது.
- முறையாக நடந்தால், நீங்கள் உண்மையில் உங்கள் இரத்த அழுத்த அளவுகளை பராமரிக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் முடியும்.
- நடைப்பயிற்சிக்கு சக்தி தேவை என்பதால், உங்கள் உடல் வேகமான விகிதத்தில் மூச்சை உள்வாங்கவும் மற்றும் வெளியேற்றவும் செய்கிறது. இது உங்கள் உடலில் உள்ள நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது.