ஹவனா:நட்சத்திர ஹோட்டலின் எரிவாயு குழாயில், ‘காஸ்’ கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதில், 14 குழந்தைகள் உட்பட, 25 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 74 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே, கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடான கியூபாவின் தலைநகர் ஹவனாவில், ‘சர்டோகா’ என்ற நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு, சில நாட்களாக பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால், அறைகளில் யாரும் தங்கியிருக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், ஹோட்டலில் உள்ள எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால், ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்தது மட்டுமின்றி, அருகிலுள்ள கட்டடங் களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி, 14 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 74 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
ஹவனா:நட்சத்திர ஹோட்டலின் எரிவாயு குழாயில், ‘காஸ்’ கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதில், 14 குழந்தைகள் உட்பட, 25 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 74 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.