மரணம் மட்டுமே… ரஷ்யாவுன் கொடூர Black Dolphin சிறை: வெளிவரும் பகீர் பின்னணி


ரஷ்யாவில் உள்ள பெரும்பாலான சிறைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தாலும், அங்குள்ள Black Dolphin சிறைச்சாலையானது கொடூரங்களில் உச்சம் என்றே கூறப்படுகிறது.

அதி உச்ச பாதுகாப்பு கொண்ட Black Dolphin சிறைச்சாலையில் கொடூர கொலைகாரர்கள், தீவிரவாதிகள், நரமாமிச கொடூரர்கள் என குறிப்பிட்ட குற்றவாளிகள் மட்டுமே சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 700 குற்றவாளிகள் இங்கு சிறைவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் 700 பேர்களும் ஒட்டுமொத்தமாக 3,500 பேர்களை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஒருவர் சராசரியாக ஐந்து கொலை செய்துவிட்டு, Black Dolphin சிறைச்சாலையில் தண்டனை அணுபவித்து வருகிரார்.

மிருகத்தனமாக கொலை குற்றவாளிகள் மட்டுமே Black Dolphin சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள் என கூறும் அதிகாரிகள், வெறி பிடித்தவர்கள், பெடோபில்கள் மற்றும் பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்களும் தற்போது இங்கு சிறைவைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ரஷ்யாவின் மிகப் பழமையான இந்த சிறைச்சாலையானது கஜகஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.
மரண தண்டனை கைதிகள் மட்டுமே இங்கே சிறைவைக்கப்பட்டுள்ளதால், கொடூரமான இந்த சிறையில் இருந்து வெளியேற வேண்டும் என்றால் மரணமடைந்தால் மட்டுமே முடியும் என்கிறார் சிறை அதிகாரி ஒருவர்.

மட்டுமின்றி, இதுவரையான வரலாற்றில் Black Dolphin சிறைச்சாலையில் இருந்து எவரும் தப்பித்ததில்லை என்றே கூறப்படுகிறது.
24 மணி நேர காணொளி கண்காணிப்பில் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, 15 நிமிடங்களுக்கு ஒருமுறை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

கைதிகள் தங்கள் அறைகளை விட்டு வெளியேறும்போது, அவர்கள் இடுப்பு வளைந்து நடக்க வைக்கப்படுகிறார்கள்.
மட்டுமின்றி, அவர்களின் கண்கள் கட்டப்பட்டு, காவலர்களால் அறைகளுக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இதனால் சிறையின் உள்கட்டமைப்பு குறித்து அவர்களால் தெரிந்து கொள்ள முடியாமல் போகும்.
சிறைச்சாலையில் உணவகம் எதுவும் இல்லை என்பதால், தினசரி நான்கு வேளை அவர்களின் அறைக்கு உள்ளேயே உணவளிக்கப்படுகிறது.

மேலும், வானொலி, புத்தகங்கள் மற்றும் நாளேஎடுகள் மட்டுமே கைதிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.