புதுடெல்லி: இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதியும், முதுகலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 21ம் தேதியும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்நிலையில் முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. தேர்வு ஜூலை 9ம் தேதி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தேர்வு ஒத்திவைப்பு குறித்த இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், வருகின்ற 21ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.